மாணவர்களுக்கு எந்திரவியல் பயிற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

மாணவர்களுக்கு எந்திரவியல் பயிற்சி

வேலூர், ஜூன் 4 வேலூர் மாவட்ட அறிவியல் மய்யத்தில் மாணவர்களுக்கான "எந்திரவியல் பயிற்சி பட்டறை" 5-ஆம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 8.6.2022 மற்றும் 9.6.2022 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். 

இவ்விரண்டு நாள் பயிற்சிப் பட்டறையில் EV-3  ரோபாட்டின் பாகங்களை தொகுத்து வடிவமைத்து செயல்முறை படுத்த விரிவான பயிற்சி அளிக்கப்படும். பங்குபெற விரும்பும் பள்ளி மாணவர்கள் தங்கள் பெயர்களை மாவட்ட அறிவியல் மய்யம், தேசிய நெடுஞ்சாலை, சத்துவாச்சாரி , வேலூர் என்ற முகவரி யில் நேரில் முன்பதிவு செய்யவேண்டும். 

பயிற்சிப்பட்டறைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். முன்பதிவு முதலில் வரும் 30 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பதிவு செய்ய கடைசி நாள் 7.6.2022. மேலும் தகவலுக்கு மாவட்ட அறிவியல் அலுவ லரைத் தொடர்பு கொள்ளலாம்.

தொலைபேசி எண்கள் 0416 - 2253297/ 2252297

No comments:

Post a Comment