சென்னை, ஜூன் 4 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமையில் மாற்றுத்திறனாளி களுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் உறுப்பினர் செயலாளராகவும், பள்ளிக்கல்வி, உயர்க்கல்வி, போக்குவரத்துத் துறை, சமூக நலத்துறை உள் ளிட்ட 12 துறைகளை சேர்ந்த முதன்மை செயலாளர்கள் உறுப்பினர்களாகவும், அலுவல் சாரா உறுப்பினர்களாக மூன்று சட்ட மன்ற உறுப்பினர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இந்த குழு, மாற்றுத்திற னாளிகள், தங்களின் உரிமை களை முழுவதுமாக அனுப விக்கும் வகையில் கொள்கைகளை வகுப்பது, மாற்றுத்திறனாளி களின் சிக்கலை உடனடியாக தீர்ப்பது, உள்ளிட்ட நடவடிக்கை களை எடுப்பதுடன், அரசுக்கு பரிந்துரைகளையும் வழங்கும். இந்த குழு பரிந்துரைப்பதை தமிழ்நாடு அரசு வரும் நாட்களில் திட்டமாக செயல்படுத்தும். மாற்றுத்திறனாளிகளின் வாழ் வில் மேம்பாடு என்ற அடிப் படையில் இந்த குழு அமைக்கப் பட்டு உள்ளது.
No comments:
Post a Comment