அடித்துக் கொன்ற கும்பல்
* பட்டியலின மக்களுக்குப் பாதுகாப்பானது பா.ஜ.க.தான்.
- அண்ணாமலை
>> செத்த பசு மாட்டுத் தோலை உரித்த தாழ்த்தப் பட்டவர்களை அடித்துக் கொன்ற கும்பலாயிற்றே!
இருந்ததே!
* ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் நீக்கப்படாது.
- ரிசர்வ் வங்கி
>> ஏன், அப்படி ஒரு திட்டம் இருந்ததோ!
என்ன பயனோ...
* ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ரூ.15 கோடி நன்கொடை..
>> இதைக் கொண்டு ஏழுமலையான் என்ன செய்யப் போகிறார்? பெருச்சாளிகளுக்குப் பஞ்சமா என்ன?
ஆதீனகர்த்தர் தேர்தலில் போட்டி?
* ஆதீனங்கள் அரசியல் பேசாமல் வேறு யார் பேசுவது?
- மதுரை ஆதீனம்
>> வரும் மக்களவைத் தேர்தலில் மதுரையில் பி.ஜே.பி. சார்பில் போட்டியிடப் போகிறாரோ!
'சமர்ப்பணம்!'
* பா.ஜ.க.வுடன் - அ.தி.மு.க. கூட்டணி தொடர்கிறது.
- எடப்பாடி பழனிசாமி
>> மேனாள் அமைச்சர்கள் பொன்னையன், செல்லூர் ராஜூவுக்கு 'அர்ப்பணம்!'
யார் தடுத்தது?
* கச்சத்தீவை பிரதமர் மோடியால்தான் மீட்க முடியும்.
- அண்ணாமலை
>> மீட்கட்டுமே - யார் தடுத்தது?
நடக்கும்
* இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய கலவரங்கள் நடக்கவில்லை.
- 'ஈஷா' சத்குரு
>> நடக்கும், நீங்கள் எல்லாம் வேறு எதற்கு இருக்கிறீர்கள்?
நம்பித் தொலையுங்கள்!
* எல்லா மதங்களையும் மதிக்கிறோம்.
- பா.ஜ.க. உறுதி
>> ஆமாம், பாபர் மசூதியை இடித்து ராமன் கோவில் கட்டுவோம்! - பா.ஜ.க.
No comments:
Post a Comment