சென்னை, ஜூன் 7- தமிழ் நாட்டில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் பாலாறு, காவிரி, வைகை, தாமிரபரணி, நம்பியாறு, கோதையாறு, வெள் ளாறு, பெண்ணையாறு, பரம்பிகுளம் ஆழியாறு, குண்டாறு, வைப்பாறு, நம்பியாறு கோதையாறு உள்பட 17 ஆற்றுப்படுகை கள் உள்ளன.
இந்த ஆற்றுப்படுகை களுடன் பல்வேறு ஏரி கள், கிளை ஆறுகள் இணைக்கப்படுகிறது. இந்த ஆற்றுப்படுகைகள் மூலம் கிடைக்கும் நீர் தொடர்பாகவும், பயன் படுத்தப்படும் நீரின் அளவு தொடர்பாகவும் முழுமையான தகவல் இதுவரை நீர்வளத்துறையிடம் இல்லை. இதனால், தான் நீர்வளத்துறை சார் பில் ஒவ்வொரு ஆற்றுப் படுகைகளில் முழுமை யான பணிகள் மேற் கொள்ளும் வகையில் திட்டங்களை வகுக்க முடியாத சூழல் உள்ளது.
இதையடுத்து, ஆற்றுப்படுகைகளின் நிலபரப்பு விவரங்களை சேகரிக்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து, முதற்கட்டமாக அக்னி யாறு, தாமிரபரணி, வரா கநதி, வைகை ஆற்றுப்படு கைகளில் நிலப்பரப்பு சர்வே அடங்கிய தகவல் களை சேகரிக்க நீர்வளத் துறை முடிவு செய்தது. அதன்படி, ஒவ்வொரு ஆற்றுப்படுகைகள் தொடங்கும் இடம் முதல் முடியும் இடம் வரை எந்தெந்த ஊர் வழியாக செல்கின்றன, அந்த ஆற் றுப்படுகைகள் மூலம் பயன்படும் ஏரிகள், குளங் கள் மற்றும் கிளை ஆறு கள், பாசன பரப்புகள் தொடர்பான விவரங்கள், ஆற்றுப்படுகையால் பயன்படும் ஊர்கள், ஆற் றுப்படுகைகளின் நீரை குடிநீருக்கு பயன்படுத்தும் பகுதிகள், வெள்ள கால கட்டத்தில் ஆற்றுப்படு கைகளில் எவ்வளவு கன அடி நீர் செல்லும், வழக் கமான காலகட்டத்தில் செல்லும் நீரின் அளவு உள்பட அனைத்து விவ ரங்களை தொகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, தாமிரப ரணி, அக்னியாறு ஆற் றுப்படுகைகள் முழுவதும் நிலபரப்பு தொடர்பான விவரங்கள் சேகரிக்கப் பட்டு, அதன் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வராக நதி, வைகை ஆற்றுப்படு கைகளின் விவரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதை தொடர்ந்து மற்ற ஆற்றுப்படுகைகளில் இப்பணிகளை மேற் கொள்ள உலக வங்கி நிதியுதவியை பெற்று இப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதி காரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment