மம்தாவுக்கு பல்கலை. வேந்தர் பதவி மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

மம்தாவுக்கு பல்கலை. வேந்தர் பதவி மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல்

கொல்கத்தா, ஜூன் 7  மேற்கு வங்கத்தில் மாநில பல் கலைக்கழகங் களின் வேந்தர் பத வியை முதலமைச்சர் மம்தவு£க்கு வழங் குவதற்கான தீர்மா னத்துக்கு அமைச் சரவை ஒப்புதல் அளித் துள்ளது. 

மேற்கு வங்கத்தில், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ஜக்தீப் தன்கார் இருந்து வரு கின்றார். இந்நிலையில் இந்த பதவியை ஆளுநரிடம் இருந்து முதலமைச்சருக்கு மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியை முதலமைச்சருக்கு வழங் குவதற்கு அனுமதிக்கும் வகையில் தீர்மானம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தீர்மானத்துக்கு அமைச்சரவை நேற்று (6.6.2022) ஒப்புதல் அளித்துள்ளது. பல்கலைக்கழக வேந்தர் பதவியை முதலமைச்சருக்கு  வழங்க வகை செய்யும் வகையில் மசோதா உருவாக்கப்படும். இதனைத் தொடர்ந்து 10 ஆம் தேதி கூடும் சட்ட மன்ற கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். 

இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என குற்றம்சாட்டிய ஆளுநர் தன்கார் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, மாநில விவகாரங்கள் குறித்து பல்வேறு தகவல்களை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment