வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது

- தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு -

சென்னை, ஜூன் 7 வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நியாயவிலைக் கடை  கடை ஊழியர்களின் போராட்டத்தை எதிர்கொள்வது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணைப் பதிவாளர் களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  அதில் கூறி இருப்பதாவது:- 

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் தங்களது 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (7 ஆம் தேதி) முதல்  9 ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய 3 நாள் தொடர் வேலை நிறுத்தம் நடத்தப் போவதாக அச்சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார். 

மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து மண்டலங்களில் பணிபுரியும் நியாய விலைக்கடை பணியாளர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதால் இன்று முதல் 9 ஆம் தேதி வரை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதவாறும், பொது விநியோகத் திட்ட பணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படா வண்ணம், பொது மக்களுக்கு அத்தியா வசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க தக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடு களை மேற்கொண்டு அனைத்து நியாய விலைக் கடைகளும் திறக்கப்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். 

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர் களுக்கு அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்கள் வேலைக்கு வராத நாளாக கருதி ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டும். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணி யாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவல கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment