சென்னையில் பன்னாட்டு தொழில் கண்காட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

சென்னையில் பன்னாட்டு தொழில் கண்காட்சி

சென்னை, ஜூன் 7  தமிழ்நாடு பிளாஸ்டிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம்  பன்னாட்டு பிளாஸ்டிக்ஸ் கண்காட்சியை, ‘அய்.பி.எல்.ஏ.எஸ். 2022’  என்ற பெயரில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மய்யத்தில், ஜூன் 10 முதல் 13ஆம் தேதி வரை நடத்தவுள்ளது. 

பிளாஸ்டிக்ஸ் பொருள்களை எவ்வாறு கையாள்வது, அதை எவ்விதம் அகற்றுவது என்ற விவரங்கள் அடங்கிய கையேட்டை டாப்மா 

(TAPMA) நேற்று (6.6.2022) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டது. இந்தக் கையேட்டில் பிளாஸ்டிக்ஸ் சார்ந்த விவரங்கள் மற்றும் பிளாஸ்டிக்ஸ் மீதான தவறான அபிப்ராயங்கள், அவற்றை அழிப்பதில் உள்ள தவறான கருத்துகளுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கண்காட்சி அரங்கில் இந்தக் கையேடு அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவசமாக விநியோகிக்கப்படும்.

இக்கண்காட்சி குறித்து டாப்மா அமைப்பின் தலைவர்  எஸ். ராக்கப்பன் கூறுகையில், “இந்தக் கண்காட்சி மூலம் ரூ. 15,000 கோடி மதிப்பிலான 8 ஆயிரம் தமிழ்நாடு பிளாஸ்டிக்ஸ் நிறுவனங்களுக்கு புதிய ஊக்கம் கிடைக்கும். இந்த நிறுவனங்கள் மூலம் தற்போது நேரடியாக 3 லட்சம் பேரும், மறைமுகமாக 8 லட்சம் பேரும் வேலை வாய்ப்பைப் பெற்று வருகின்றனர். இத்துறை மூலம், அரசுக்கு ஆண்டுதோறும்  ரூ. 2,700 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாகக் (ஜிஎஸ்டி) கிடைக்கிறது. இத்துறையில் மிக அதிக அளவில் சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment