இந்திய ரயில்வேயில் பயணச்சீட்டு முன்பதிவு எண்ணிக்கை அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

இந்திய ரயில்வேயில் பயணச்சீட்டு முன்பதிவு எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை, ஜூன் 7  அய்ஆர்சிடிசியில் ஆதார் எண்ணை இணைத்தால் பயணிகள் ஒரு மாதத்திற்கு 24 ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்’ என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. 

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் இணையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதிகளை சிறப்பாக மேம்படுத்தி வருகின்றது. இதற்கு முன்னதாக அய்ஆர்சிடிசியானது, ஒருவர் மாதத்திற்கு 6 பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு அனுமதித்தது. அதே நேரத்தில் அய்ஆர்சிடிசியுடன் ஆதாரை இணைத்திருந்தால் அவர் 12 பயணச்சீட்டுகள் வரை பதிவு செய்ய முடியும். இந்நிலையில், தற்போது ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பயணச்சீட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி,  அய்ஆர்சிடிசியுடன் ஆதார் எண்ணை இணைத்திருந்தால் அந்த நபர், ஒரு மாதத்திற்கு 24 ரயில் பயணச்சீட்டுகள் வரை பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ஆதார் இணைக்காமல் இருக்கும்பட்சத்தில் மாதத்திற்கு 12 பயணச்சீட்டுகள் வரை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment