அரசு பள்ளிகள் மேம்பாட்டிற்கு 20 பேர் கொண்ட குழு தேர்வு: 10 பெண்கள் உறுப்பினர்களாக இருக்க உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

அரசு பள்ளிகள் மேம்பாட்டிற்கு 20 பேர் கொண்ட குழு தேர்வு: 10 பெண்கள் உறுப்பினர்களாக இருக்க உத்தரவு

சென்னை, ஜூலை 11 அரசு பள்ளிகளின் முன்னேற்றத்துக்காகவும், வளர்ச்சிக்கு துணை நிற்கவும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரி மைச்சட்டம் 2009இன்படி, பள்ளி மேலாண்மைக்குழு உருவாக்கப்பட்டது. 

தற்போது, இந்த குழுவை மறு கட்டமைப்பு செய்து புதிய பாதையில் பயணிக்க ஏதுவாக பள்ளிக்கல்வித் துறை சில முக்கிய நடவடிக்கைகளை எடுத் துள்ளது. அதன்படி, இந்த குழுவில் 20 உ றுப்பினர்கள் நியமிக்கப்படுவதோடு, அதில் பெரும்பாலும், அதாவது 75 சதவீதம் அந்தந்த பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோரே இருக்கும் வகையிலும், அதிலும் குறைந்தபட்சம் 10 உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்ற வகையிலும் உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேலும், குழு தலைவராக பெற்றோரே நியமிக்கப்பட வேண்டும், மாற்றுத்திறனாளி குழந்தை களின் பெற்றோர் இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் உள்ள பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மறுகட்ட மைப்பு கூட்டம் நடந்தது. இதில், மேலாண்மைக் குழுவுக்கான 20 உறுப்பி னர்கள் முதலில் தேர்வு செய்யப்பட்டனர்.

அந்தவகையில் சென்னையில் மட்டும் 103 பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த குழுவால், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர் நல உதவித் திட்டங்கள், கரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாடு முழுவதும் தற்போது அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டில் பெற்றோர்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை நடைமுறைப்படுத்தும் வகை யில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்.எம்.சி) மறுசீரமைப்பு செய்யப்படு கின்றன. ஆறு முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளைக் கண்ட றிந்து, வயதிற்கு ஏற்ற வகுப்புகளில் சேர்த்து, தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதிசெய்வது இந்த குழுவின் முக்கியப் பணியாகும். பள்ளியின் தரம், ஆசிரியர் களின் வருகை, கற்பித்தல், தேவையான அடிப் படை வசதிகள் உள்ளிட்டவற்றை நிறை வேற்றும் பொறுப்பும் இந்த குழுவிற்கு உள்ளது. பள்ளி நிர்வாகம் என்பது தலைமையாசிரியருக்கு மட்டும் தான் என்கிற நிலை இல்லாமல் பெற் றோர் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் பங்களிப்பு உள்ளது என்பதை உறுதிப் படுத்துகிறது. இந்த குழுவின் கூட்ட நிகழ்வுகள், தீர்மா னங்கள் குறித்து தனி பதிவேடுகளை பராமரிக்கப்பட வேண் டும். இதுகுறித்து குழுவின் ஒருங்கிணைப் பாளரும், சென்னை மாநில மகளிர்  மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியையுமான ராம லட்சுமி கூறுகையில், ‘பள்ளிக்கு  வராமல் இருக்கும் மாணவ, மாணவிகளை இவர்கள் மூலம் வரவழைக்க நடவடிக்கை  எடுக்கப்படும். ஒழுங்கீன செயலில் ஈடு படும் மாணவர்களை, இவர்கள் மூலம்  அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப் படுத்தி சீர்திருத்த முடியும். மேலும், இந்த குழுவில் அனைத்து தரப்பினரும் உறுப் பினர்களாக இருப்பதால் பள்ளிகளின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல  முடியும்’ என்றார்.

குழுவின் பணிகள்: மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாரத்திற்கு ஒருமுறை யாவது பள்ளிக்கு வந்து பார்வையிட வேண்டும். மாதம் ஒருமுறை மேலாண்மை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். அந்த கூட்டத்தில் பள்ளியின் தற்போதைய நிலை, தேவையான வசதிகள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும். குறிப்பாக, இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை இந்த குழு மாற்றி அமைக்கப்பட வேண்டும்.  

No comments:

Post a Comment