சென்னை, ஜூலை 11 அனைத்து மாவட்டங்களி லும் வரும் 15ஆம் தேதி காம ராஜர் பிறந்த நாள் கருத்தரங்கு நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சராக காமராஜர் பொறுப்பு வகித்த ஒன்பதரை ஆண்டுகால ஆட்சியில்தான் கல்விப் புரட்சி ஏற்பட்டது.
மதிய உணவுத் திட்டம், தொழில் வளர்ச்சி, மின்துறை, பாசனத் திட்டங்கள், நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள், மக்களுக்கு அதி காரம் அளிக்கும் பஞ்சாயத்து ராஜ் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், அவரது ஆட்சிக் காலத்தில்தான் நிறைவேற்றப் பட்டன.
அதனால்தான் காமராஜர் ஆட்சிக் காலத்தை, தமிழ் நாட்டின் பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்து, பாராட்டு கிறார்கள். அவரது ஆட்சியில்தான் தமிழ்நாடு அனைத்து நிலை களிலும் வளர்ச்சிப் பாதையில் சென்றது. கிராமப் பகுதிகளில் பல்வேறு வளர்ச் சித் திட் டங்கள் அறிமுகப் படுத்தப் பட்டன.
எனவே, காமராஜரின் 120ஆவது பிறந்த நாளில், அனைத்து மாவட்ட காங்கிரசார் வரும் 15ஆம் தேதி ‘காமராஜர் ஆட்சி முறை’ என்ற தலைப்பில் கருத்தரங் குகள் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
அதே போல, நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள் தங்களது தொகுதி களில் கருத்தரங்கு நடத்த உள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முந்தைய காமராஜர் ஆட்சியின் சாதனைகளையும், அவருடைய அணுகுமுறை களையும் இன் றைய இளைய சமுதாயத்தினர் அறிந்துகொள் ளும் வகையில் அந்தக் கருத்தரங்கம் அமைய உள்ளது.
மேலும், காமராஜர் பிறந்த நாளில் ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங் கப்பட உள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் வளர்ச்சிக்கு வித்திட்டு, இன்றைய காங்கிரசின் அடை யாள மாகத் திகழ்பவர் காம ராஜர்.
எனவே, அவரது பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் தமிழ் நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, பொது மக்களும் பெருமளவு பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment