சென்னை, ஜூலை 8- உலகின் 2ஆவது பழைமையான கண் மருத்துவமனையான எழும்பூர் அரசு கண் மருத்துவ மனை 204ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.
சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 1809 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மார்பீல்டு கண் மருத்துவ மனைக்கு அடுத்தபடியாக 1819ஆம் ஆண்டு சென்னை ராயப்பேட்டை 'பழைய மெட்ராஸ் கிளப்' அருகே டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சன் என்பவரால் இந்த கண் மருத் துவமனை தொடங்கப்பட்டது.
1844ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை சென்னை எழும்பூர் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. ஆங்கிலேயர் கட் டுப்பாட்டில் இருந்த இந்த மருத்துவமனை, நாடு சுதந்தி ரம் அடைந்த பின்னர் அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. உலகின் 2ஆவது பழைமையான கண் மருத்துவமனை, ஆசியா வின் முதல் தொன்மையான கண் மருத்துவமனை என்ற தனிச் சிறப்புடன் செயல்பட்டு வரும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை 204ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
1887இல் கட்டிய கட்டடம்
வைரஸ் மூலம் கண்களில் பரவும் 'மெட்ராஸ்-அய்' எனப் படும் நோய் கண்டுபிடிக்கப் பட்டதும் இந்த மருத்துவ மனையில் தான். கண்புரை அறுவை சிகிச்சையும் இங்கு தான் முதன் முதலில் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக 1926ஆம் ஆண்டு கண் மருத்துவம் சம்பந்தமான படிப்பும், 1948ஆம் ஆண்டு கண் வங்கியும் இந்த மருத்துவ மனையில் தான் தொடங்கப் பட்டது. 1887ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை வளா கத்தில் 3 தனித்தனி கட்¢டங்கள் கட்டப்பட்டன. அத்துடன் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு, அய்ரோப்பியா மற்றும் இந்திய மாடல்களில் சமையல் அறை, குடியிருப்பு ஆகியவை யும் கட்டப்பட்டன. தற்போது வரை இந்த கட்டடங்கள் பயன்பாட்டில் உள்ளன.
1911ஆம் ஆண்டு 'தி லேடி லாவ்லீ பிளாக்' எனப்படும் கட்டடமும் இங்கு கட்டப்பட் டது. இதுவும் தற்போது வரை நோயாளிகளுக்கான வார்டு மற்றும் ஆபரேசன் தியேட் டர்களாக தனது பங்களிப்பை அளித்து வருகிறது. இங்குள்ள பழமையான கட்டடங்கள் தொன்மை மாறாமல் தொல் லியல் துறையின் கட்டுப்பாட் டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கட்டடத்தின் வெளித்தோற் றம் இப்போதும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
203 ஆண்டுகளாக பல லட்சம் பேருக்கு ஒளி வழங்கி ஓயாத சேவையை மேற் கொண்டு வரும் இந்த கண் மருத்துவமனையின் இயக்குந ராக தற்போது டாக்டர் எம்.வி.எஸ்.பிரகாஷ் இருந்து வருகிறார்.
இந்த மருத்துவமனையின் செயல்பாடு குறித்து அவர் கூறியதாவது:- கண் நோய் களுக்கு உயர்தர சிகிச்சை மய் யமாக எழும்பூர் கண் மருத் துவமனை செயல்பட்டு வருகி றது. தினசரி 600 முதல் 800 வெளிநோயாளிகளும், 250-க்கும் மேற்பட்ட உள்நோயா ளிகளும் சிகிச்சை பெறுகிறார் கள்.
சராசரியாக தினந்தோறும் 40-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இங்கு 478 படுக் கைகள் உள்ளன. அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
தற்போது இங்கு எம்.எஸ். (கண் மருத்துவம்) படிப்பில் ஆண்டுக்கு 30 மாணவர்களும், பி.எஸ்சி. கண் மருத்துவ படிப்பில் 20 பேரும் சேர்த்து கொள்ளப்பட்டு பயிற்சி வழங் கப்படுகிறது. இங்கு இந்தியா வின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கண் மருத்துவர்களும், வெளிநாட்டைச் சேர்ந்த கண் மருத்துவர்களும் பயிற்சிக்காக வந்து செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
எலியட் மியூசியம் என்ற பெயரில் இங்கு 200 ஆண்டு களுக்கு முன்பு பயன்படுத்தப் பட்ட மருத்துவ கருவிகள் பொக்கிஷமாக பாதுகாக்கப் பட்டு வருகின்றன. பிற மாநி லங்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் கண் மருத்து வர்கள் இந்த மியூசியத்தை ஆச்சரித்துடன் பார்த்து செல் கின்றனர். 200 ஆண்டுகள் பொக்கிஷங்கள் அடங்கிய இந்த மியூசியத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனும தியில்லை என்பது பெரும் குறை.
No comments:
Post a Comment