புதுடில்லி,ஜூலை 8 இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 7.80 சதவிகிதம் என்ற அள விற்கு உயர்ந்திருப்பதாக, பொருளா தார சிந்த னைக் குழுவான இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மய்யம் (Centre for Monitoring Indian Economy - - சிவிமிணி) அறிக்கை வெளியிட்டுள்ளது. முக்கியமாக வேளாண் துறையில் 13 மில்லியன் (அதாவது 1 கோடியே 30 லட்சம்) அளவிற்கும், ஊதியம் பெறும் ஊழியர்கள் மத்தி யில் சுமார் 2.5 மில்லியன் (25 லட்சம்) வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் இந்தக் காலத்தில் 8.21 சதவிகிதத்திலிருந்து, 7.30 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று கூறும் அறிக்கை, விவசாயப் பணிகள் உள்ளிட்ட கிராமப்புற வேலைவாய்ப் பில் ஏற்பட்டிருக்கும் சரிவு, ஒட்டு மொத்த வேலைவாய்ப்பின்மை விகி தத்தையும் 7.80 சதவிகிதம் என்ற அள விற்கு சரித்து விட்டதாக குறிப் பிட்டுள்ளது. “பொதுமுடக்கம் போன்றவை இல்லாத நிலையில், 7.80 சதவிகிதம் என்ற வேலை யின்மை என்பது மிகப்பெரிய வீழ்ச்சியாகும்” என்று சிஎம்அய்இ நிர்வாக இயக்குநர் மகேஷ் வியாஸ் கூறியுள்ளார்.
“இந்த வீழ்ச்சியானது முக்கியமாக முறை சாரா சந்தைகளில் அமைந் துள்ளது" என்றும், “இது பெரும்பாலும் தொழி லாளர் இடப் பெயர்வுப் பிரச்சினை யாக இருக்கலாம்” என் றும் கூறி யிருக்கும் மகேஷ் வியாஸ், “ஜூன் மாதத்தில் 13 மில்லியன் பேர் வேலை இழந்த நிலையில், வேலையில்லாத வர்களின் எண்ணிக்கை 3 மில்லியன் (30 லட்சம் பேர்) மட்டுமே" என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஜூலை யில் விதைப்பு தொடங் கும்போது, கிராமப்புற வேலையின்மை விகிதம் தலைகீழாக மாற வாய்ப்புள்ளது'' என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார். சிஎம்அய்இ தரவு களின் படி, வேலையின்மை அதிகம் நிலவும் மாநிலங்களாக அரியானா (30.6 சத விகிதம்), ராஜஸ்தான் (29.8 சதவிகி தம்), அசாம் (17.2 சதவிகிதம்), ஜம்மு - காஷ்மீர் (17.2 சதவிகிதம்), பீகார் (14 சதவிகிதம்) ஆகியவை உள்ளன.
No comments:
Post a Comment