40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!


 கடலூர், தருமபுரி மாவட்டங்களில் விடுதலை சந்தா சேர்ப்பு பணி

படம் 1: கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் சிவகுமார், மாவட்ட அமைப்பாளர் மணிவேல் ஆகியோர் சந்தா சேர்க்கை பணியில் ஈடுபட்டனர் (8.7.2022),

படம் 2: தருமபுரி விடுதலை வாசகர் வட்ட செயலாளர் சுதா மணி ஒரு ஆண்டு சந்தா, தருமபுரி மண்டல த்தலைவர் அ.தமிழ்செல்வனிடம் வழங்கினார். மேனாள் மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி தருமபுரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் க.சின்னராஜ் ஆகியோர் உடன் உள்ளார்.

****

கடலூர் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி

கடலூர் மாவட்டத்தில் கடலூர், வேகா கொல்லை,வடலூர், மருவாய் ஆகிய இடங்களில் சந்தா சேர்க்கை புத்தகங்கள் வழங்கப்பட்டன கடலூர் மேயர் சுந்தரி ராஜா சார்பில் நகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா பத்து சந்தாக்களுக்கான ரசீதைப் பெற்றுக் கொண்டார்.
****
திண்டிவனம் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி
திண்டிவனம் கழக மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 07-07- 2022 அன்று நடைபெற்றது. இதில் திண்டிவனம் கழக மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 1000 விடுதலை சந்தாக்களை விரைந்து திரட்டுவதற்காக  கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் ஆகியோர் கழகப் பொறுப்பாளர்களிடம் விடுதலை சந்தா புத்தககங்களை வழங்கினர். புத்தகங்களைப் பெற்றுக் கொண்டோர் விவரம்: மாவட்டத் தலைவர் இர.அன்பழகன், மாவட்டச் செயலாளர் பரந்தாமன், விழுப்புரம் மண்டலச் செயலாளர் தா. இளம்பரிதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தா. தம்பிபிரபாகரன், மாவட்ட ப.க செயலாளர் நவா.ஏழுமலை, மாவட்ட அமைப்பாளர் வில்லவன்கோதை, இரா.சாமிநாதன், ஏ. பெருமாள், கிருட்டினமூர்த்தி, சீனிவாசன்,  மைலம் ஒன்றியச் செயலாளர் அன்புக்கரசன், திண்டிவனம் நகரத் தலைவர் உ.பச்சையப்பன், நகரச் செயலாளர் சு.பன்னீர்செல்வம், வானூர் செயலாளர் அன்பரசன், மாவட்ட இளைஞரணித் தலைவர் மு.ரமேஷ், மாணவர் கழகத் தலைவர் மாரிமுத்து, மாவட்ட  இளைஞரணிச் செயலாளர் தேவராஜ், சுகன், கவியரசு ஆகியோர்  புத்தகங்களை ஆர்வமுடன் பெற்றுக்கொண்டு  விரைந்து சந்தாக்களை வழங்குவதாக உறுதியளித்தனர்.
****
குடந்தை மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி
மாவட்டத் தலைவர் கு.நிம்மதி தலைமையில் மாவட்ட செயலாளர் சு.துரைராசு முன்னிலையில் தஞ்சை மண்டல செயலாளர்  க.குருசாமி-ராணி குருசாமி இணையர் 10 விடுதலை சந்தாக்களுக்கான தொகையை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்மணிக்கு 10 சந்தாவுக்கான புத்தகங்கள், மாநில மாணவர் கழகத் துணைச்செயலாளர் ச.அஜிதனுக்கு 20சந்தாவுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டது. (9.7.2022) 
****
செங்கற்பட்டு மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய பொறுப்பாளர் சிங்கப்பெருமாள் கோயில் குணசேகரன்-வசந்தகுமாரி, அஸ்வின் ஆகியோர் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்கள்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத் தொகுதி செயலாளர் சிங்கப்பெருமாள் கோயில் ஏ. இராஜ்குமார் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.  பெருந்தகையாளர் சிங்கப்பெருமாள் கோயில் என். ஏ. வாசுதேவன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.  மாவட்ட திமுக விவசாய அணி தலைவர் சிங்கப்பெருமாள்கோயில் என். ஆனந்தன்ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.  செங்கற்பட்டு நகர திராவிடர் கழக செயலாளர் கவிஞர் யாழன் -கலைவாணி ஸ்டாலின் பிரபாகரன், சங்கமித்திரை குடும்பத்தின் சார்பில் பத்து சந்தா ரசீது பெற்றுக் கொண்டார்கள்.  பாட்டாளி மக்கள் கட்சி மத்திய மாவட்ட துணைத்தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.ஜெ.அண்ணாமலை ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். 

செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பூ.சுந்தரம்- மாவட்ட மகளிரணி தலைவர் சு.ஆனந்தி இணையர் 40 விடுதலைசந்தா ரசீது பெற்றுக் கொண்டார்கள்.  மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்செ. சாலமன் பத்து சந்தா ரசீது பெற்றுக் கொண்டார்.  கல்பாக்கம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் ம. விசயகுமார் பத்து சந்தா ரசீது பெற்றுக் கொண்டார் .  கல்பாக்கம்  வட்ட திமுக செயலாளர் எஸ்.எ.பச்சையப்பன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.  கல்பாக்கம் பொதுக்குழு உறுப்பினர்பெரியார்பெருந்தொண்டர் பக்தவச்சலம், மருமகள் தீபா குமணன், பேரன் கனல் ஆகியோர் ஓராண்டு விடுதலை சந்தாவழங்கியதுடன் இருபது சந்தாஇரசீது பெற்றுக்கொண்டார்கள்.  சிங்கப்பெருமாள் கோயில் மேனாள் திமுக  கிளைச் செயலாளர்  துரைபாபு இரண்டாண்டு விடுதலை சந்தா வழங்கினார். ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சிங்கப்பெருமாள் கோயில் நரசிம்மன் 10 விடுதலை சந்தா ரசீது பெற்றுக் கொண்டார். திராவிட முன்னேற்றக் கழக தொழில் நுட்ப அணி துணைத் தலைவர் கே.பி.இராசன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர் க.சாகிர் பாஷா ஓர் ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார்.  செய்யூர் பெரியார்பற்றாளர் வினோத் இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய தலைவர் கோபி ஆகியோர் பத்து விடுதலை சந்தா திரட்டித் தருவதாக உறுதிதெரிவித்தார்கள்.
***
கன்னியாகுமரி மாவட்டத்தில் அஞ்சலக அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற பெருவிளை எஃப். சேக் மதார் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார். 
***
தருமபுரி மேனாள் மாவட்ட தலைவர் வீ. சிவாஜியிடம் ஆசிரியர் கிருஷ்ணன் (ஓய்வு) ஒரு ஆண்டு விடுதலைச் சந்தா மற்றும் சி.கிருஷ்ணன் (திமுக) ஒரு ஆண்டு சந்தா வழங்கினர். உடன் மேனாள் நகர தலைவர் வினோ வடிவேல்.
***
தர்மபுரி மேனாள் மாவட்ட தலைவர் வீ. சிவாஜியிடம் ஒரு ஆண்டுக்கான விடுதலை சந்தா ரூ.2000அய் சுரேஷ், சண்முகம் இருவரும் இணைந்து அளித்தனர்.







No comments:

Post a Comment