தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

போடி, ஜூலை 11- 10.7.2022இல் தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் போடியில் மாவட்டத் தலைவர் அலுவலகத் தில் மாவட்ட தலைவர் ரகுநாக நாதன் தலைமையில் நடைபெற்றது.  

மாவட்ட செயலாளர் மணி கண்டன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிரேம்குமார், இளைஞர் அணி செயலாளர் சர வணன் முன்னிலை வகித்தனர். ஆண்டிபட்டி ஸ்டார் நாகராஜ், பெரியகுளம் அன்புக்கரசன் மற் றும் போடி பேபி சாந்தா தேவி  நகரத் தலைவர் பெரியார் லெனின், பொறியாளர் முருகானந்தன், ஆண்டிபட்டி தலைவர் ஜோதி, மாணவர் கழகம் பெரியார் மணி - பேபி கவின் மதி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டார்கள். 

விடுதலை நாளிதழ் சந்தா தலைமைக் கழகம் அறிவித்தபடி வசூல் செய்து கொடுப்பது என்றும் அரியலூர் மாநாடுக்கு இளைஞர் கள் அதிக அளவில் கலந்து கொள் வதென்றும் மாநாட்டில் சிறப்பான முறையில் வசூல் செய்து கொடுப்ப துடன் தனி வாகனத்தில் தோழர் கள் கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. மாநாடு செல்லும் வாகன வாடகைக்காக ரூ5000 மாவட்ட தலைவர் அறிவித்தார்.

இரங்கல் தீர்மானம்:  காமய கவுண்டன்பட்டி நகரத் தலைவர் அழகேசன் தாயார் தங்கம்மாள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. மதியம் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment