சென்னை, ஜூலை 26 இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக் கவும், மீன்பிடிப் படகுகளின் உரிமை யாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள வலி யுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில் "தமிழ்நாட்டைச் சேர்ந்த 92 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளது. அவற்றில் சில படகுகள் 2018 ஆம் ஆண்டில் சிறை பிடிக்கப்பட்டதால், அவை முற்றிலும் சேதம் அடையக்கூடும். படகின் உரிமை யாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அவர்களது படகிற்கான உரிமையைக் கோர வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில், கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீன வர்கள் விடுவிக்கப்பட்டனர். தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரண மாக அவர்களால் இலங்கை நீதிமன்றத் தில் ஆஜராக முடியவில்லை.
எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இந்திய அரசின் உயர்மட்ட அளவில் உறுதி யான மற்றும் ஒருங்கிணைந்த நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மீன்பிடிப் படகின் உரிமை யாளர்கள், இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும்" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களை சொந்த நாட்டுக்கு அழைத்துவர உதவியதற்கு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment