தமிழ்நாட்டில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்: அமைச்சர் க.பொன்முடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

தமிழ்நாட்டில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்: அமைச்சர் க.பொன்முடி

சென்னை, ஜூலை  10 சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி யான பின்னர், அம்மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் 

க.பொன்முடி கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயல கத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்," இன்றுவரை சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தெரியாத ஒரு சூழல் நிலவுகிறது. எனவே சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவர்கள் எங்கு விண்ணப்பிப்பது, எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியாமல் திணறிக்கொண்டுள்ளனர்.

எனவே அந்த மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், சிபி எஸ்இ தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டு, அதன்பின்னர் 5 நாட்களுக்கு கல்லூரிகளில் சேர அந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, 5 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.

எனவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக் கின்ற கடைசி நாள் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளைப் பொறுத்தே அமையும்.

இதுவரை அரசு கலைக் கல்லூரி களுக்கு 3 லட்சத்து 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு அரசுத் தரப்பிலும், தேர்வு முடிவு களை வெளியிடுமாறு சிபிஎஸ்இயிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கால நீட்டிப்பு என்பது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.

அரசு கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிகமான அளவில் விண்ணப்பித்திருப்பதால், ஏற்கெனவே இருந்த இடங்களைவிட 25 சதவீதம் அதிகமாக உயர்த்தப்படும். முன்னதாக 15 சதவீதமாக இருந்தது. கரோனா காலமாக இருந்ததால், கடந்தஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் உயர்த்தப்பட்டது, இந்த ஆண்டும் இது தொடரும். ஆசிரியர்களின் எண்ணிக்கை, உள் கட்டமைப்பு வசதி ஆகியவற்றின் அடிப்படையில்தான், மாணவர் களின் எண்ணிக்கை உயர்த்தப்படு கிறது.

அரசுக் கல்லூரிகளுக்கு விண் ணப்பித்திருக்கிற அனைத்து மாண வர்களுக்கும் இடம் கிடைப்பதற் கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்" என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment