பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் கனிமொழி எம்.பி., கேள்வி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் கனிமொழி எம்.பி., கேள்வி!

புதுடில்லி, ஜூலை.22- “ஒன்றிய அரசால் நகர்ப்புறங்களில் செயல் படுத் தப்பட்டு வரும் பிரதம அமைச்சர் வீட்டு வசதி திட்டத்துக் கான நிதி வேறு திட்டங்களுக்கு மடைமாற்றப் படுகிறதா என்பதை அறிய, இத் திட்டத்தின் செயல் பாடுகள் பற்றி சமூகத் தணிக்கை நடத்தப்பட்டிருக்கிறதா? அவ் வாறு ஆய்வு செய்திருந்தால் ஒவ் வொரு மாநிலத்திலும் இத்திட்டத் தின் செயல்பாடுகளைப் பற்றிய விவரங்களை வெளியிட வேண் டும். அவ்வாறு சமூகத் தணிக்கை செய் யப்படவில்லை என்றால் ஏன் என்ற காரணத்தை கூறவேண்டும்” என்று தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், மக்களவை தி.மு.க. குழுத் துணைத் தலைவருமான கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்தக் கேள்விகளுக்கு ஒன்றிய நகர்ப்புற வீட்டு வசதித் துறை இணை அமைச்சர் கவுஷல் கிஷோர், நேற்று (21.7.2022) எழுத்துபூர்வமாக அளித்த பதில் வருமாறு:--

“ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகா ரத்துறை அமைச்சகம் சார்பில் பிரதம அமைச்சர் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அடிப்படை வசதி களைக் கொண்ட எந்த கால நிலைக்கும் பாதிக்கப்படாத வகை யில் வீடுகள் கட்டித் தரப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வீடு கட்டுவ தற்கான மூன்றாவது தவணை நிதி விடுவிக்கப்படுவதற்கு முன் இத்திட் டம் முறையாக செயல்படுத்தப்படு கிறதா என்பதை அறிய சமூகத் தணிக்கை செய்யப்படுவது கட் டாயமாகும். இந்த சமூகத் தணிக்கை மூல மாக இந்தத் திட்டத்தின் நடைமுறை மற்றும் பலன்கள் உரிய வகையில் பயனா ளிகளுக்கு சென்றடைகிறதா என்­பதை கண்காணிக்க முடிகிறது. மேலும் சமூகத் தணிக்கையானது இத் திட்டத்தை சிறப்பாக நடை முறைப்­படுத்துதல், அதிகாரிகள் மற்றும் பயனாளிகளின் பொறுப் புத் தன்மையை உறுதி செய்தல், வெளிப்படைத் தன்மை ஆகிய வற்றில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதம அமைச்சர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் சமூக தணிக்கை பற்றிய விவரங்கள் https://www.mohua.gov.in/upload/uploadfiles/files/7PMAY_Social_Audit_Guidelines_2017$2017 Apr25181455.pdf  என்ற இணைய முகவரியில் காணக் கிடைக்கின்றன.

சமூகத் தணிக்கை செய்வதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசு களுக்கு இத்திட்டத்தில் இருந்து ஒன்றிய அரசு முழு நிதியுதவி செய்கிறது. 

இதுவரை பிரதம அமைச்சர் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தமிழ் நாடு, ஆந்திரா, அருணாசலப்பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகா லயா, மிசோரம், நாகா லாந்து, ஒடிசா, புதுச்சேரி, திரிபுரா, உத்திரப்பிரதேசம், உத்தர்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங் களுக்கு சமூகத் தணிக்கை செய்வ தற்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

-இவ்வாறு ஒன்றிய அமைச்சர் பதிலளித்தார்.

No comments:

Post a Comment