அரியலூர் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டு விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

அரியலூர் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டு விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

அரியலூர், ஜூலை 22- திராவிடர் கழக மாநில இளைஞரணி  மாநாட்டு விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் அரியலூர் வாலாஜா நகரம், வீணா கைகாட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. கழக மாநில மகளிர் பாசறை அமைப் பாளர்  வழக்குரைஞர் சே.மெ.மதி வதனி சிறப்புரையாற்றினார்  

மண்டல செயலாளர்  கோவிந்த ராஜ் தலைமையில் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் முன்னிலையில்  அரியலூர் ஒன்றிய தலைவர் கோபால், ஒன்றிய செயலாளர் இளைஞர் அணி பொறுப்பாளர் திராவிட விஷ்ணு,  ஓட்டகோவில் செந்தில் செந்துறை  ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்ச் செல்வன் பங்கேற்று சிறப்பித்தனர்

நிகழ்ச்சியை  மண்டல இளைஞ ரணி செயலாளர் பொன். செந்தில் குமார் ஒருங்கிணைப்பு செய்தார்.

திராவிடர் கழக மாநில இளை ஞரணி  மாநாட்டு விளக்க தெரு முனை பிரச்சாரக் கூட்டத்தை செந்துறையில் மாவட்டத் தலை வர் விடுதலை  நீலமேகம் தொடங்கி வைத்தார் செந்துறை, இரும்புலிக் குறிச்சி, உடையார்பாளையம், அரி யலூர்  வாலாஜாநகரம் வீ கைகாட்டி ஆகிய இடங்களில் திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்  வழக்குரைஞர் சே. மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.

மண்டல தலைவர் கோவிந்த ராஜ்,  மண்டல செயலாளர் மணி வண்ணன், சு.அறிவன், மாவட்ட இளைஞரணி தலைவர் மா.சங்கர், மாவட்ட துணைச்செயலாளர், சிவக்கொழுந்து, தொழிலாளர் அணி மாவட்டச்செயலாளர் வெ. இளவரசன், ஒன்றிய செயலாளர் ராச.செல்வக்குமார், செந்துறை மதியழகன் முன்னிலையில் செந் துறை ஒன்றிய செயலாளர் மு.முத் தமிழ்ச்செல்வன், அரியலூர் ஒன் றிய தலைவர் கோபால், ஒன்றிய செயலாளர் இளைஞர் அணி பொறுப்பாளர் திராவிட விஷ்ணு.  ஓட்ட கோவில் செந்தில், ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்ச்செல்வன் பங்கேற்று சிறப்பித்தனர், மண்டல இளைஞரணி செயலாளர் பொன் செந்தில்குமார் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தார்.

No comments:

Post a Comment