வசனாங்குப்பம் பெரியார் வாழ்வியல் மய்யத்தில் வேகா கொல்லை, அப்பியம்பேட்டை, கட்டியங்குப்பம் கிராமங்களைச் சேர்ந்த கழக இளைஞர்கள் மற்றும் பொதுவான இளைஞர்கள் கலந்துரையாடல் கூட்டம் 9.7. 2022 அன்று மாலை 6:00 மணி முதல் 8 மணி வரை மண்டல இளைஞர் அணி செயலாளர் நா.பஞ்சமூர்த்தி தலைமையில் மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், செயலாளர் வேலு, கட்டியங்குப்பம் சேகர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தந்தை பெரியாரின் அருமை பெருமைகள் பற்றியும் திராவிடர் கழகத்தின் தொண்டு குறித்தும் வாழ்வியல் சிந்தனைகளை விளக்கியும் சிறப்புரை ஆற்றினார் அரியலூரில் ஜூலை 30 அன்று நடைபெற உள்ள கழக இளைஞரணி மாநில மாநாட்டில் பேரணியில் பெரும் திரளாக தோழர்கள் பங்கேற்க வேண்டும் என்பதைப் பற்றியும் விடுதலை சந்தா சேர்க்கை பற்றியும் விளக்கி பேசப்பட்டது ஒன்றிய செயலாளர் செந்தில் வேல், அப்பியம் பேட்டை கழகத் தலைவர் தனசேகரன், வேகா கொல்லை கழகத் தலைவர் கதிர்வேல் சத்தியா குணசுந்தரி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment