பொத்தனூர் க.சண்முகம் நூற்றாண்டு விழா வைகோ வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

பொத்தனூர் க.சண்முகம் நூற்றாண்டு விழா வைகோ வாழ்த்து

பொத்தனூர், ஜூலை 10 பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழா 03.07.2022 அன்று நடை பெற்றது. 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், அலைபேசி 

வாயிலாக அவருடன் தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறினார். மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அவர்கள், வைகோவிற்கு நன்றி தெரிவித்துவிட்டு, காயிதே மில்லத் விருது பெறுவதனை சுட்டிக்காட்டி, தன் வாழ்த்துகளைப் தெரிவித்தார்.

மாலை 5 மணிக்கு, மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் அவர்கள் மதிமுக தோழர்களுடன் சென்று, நூற்றாண்டு நாயகர் பொத்தனூர் சண்முகம் அவர்களை சந்தித்து, சந்தனமாலை பயனாடை ஆகியவைகளை அணிவித்து, நூல்களையும், ம.தி.மு.க. தலைவர் வைகோ அவர்களின் வாழ்த்துச் செய்தி அடங்கிய பேழையையும் அளித்து  வாழ்த்துக் கூறினார். மிசா சிறையில் சேலத்தில் வைகோ அவர்களுடன் இருந்த செய்திகளை மலரும் நினைவுகளாக பொத்தனூர் க.சண்முகம் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மதிமுக பொறுப்பாளர்கள்- மாவட்டக் கழகப் பொறுப்பாளர் கே.கே.கணேசன், மாநில மருத்துவர் அணிச் செயலாளர் டாக்டர் சங்கேஸ்வரன், மாநில மாணவர் அணிச் செயலாளர் பால சசிகுமார், மாநில மகளிர் அணித் துணைச் செயலாளர் நாமக்கல் பத்மா, சட்டத் திருத்தக்குழு உறுப்பினர் என்.எஸ்.ரங்கசாமி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் த.பவுன் ராஜ், கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் வி.ஏ.மணி, பொத்தனூர் பேரூர் கழகச் செயலாளர் ஏ.கே.டி.இராமலிங்கம், அவைத் தலைவர் த.இராமசாமி, பரமத்தி வடக்கு ஒன்றியச் செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட மாணவர் மன்ற அமைப்பாளர் மு.ராஜசேகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில், மதிமுக கரூர் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கி.முகேஷ், சேலம் ஆடிட்டர் ரஜினிகாந்த், வைகோ செந்தில், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு சண்முகம், பேராசிரியர் காளிமுத்து ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

03.07.2022 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், தந்தை பெரியார் படிப்பக கட்டட திறப்பு விழா, மலர் வெளியீட்டு விழா ஆகிய நிகழ்வுகளுடன் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் நூற்றாண்டு விழா சிறப்புடன் நடைபெற்றது.

No comments:

Post a Comment