அரிசிக்கு ஜிஎஸ்டியா? கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

அரிசிக்கு ஜிஎஸ்டியா? கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 30  அரிசி உள் ளிட்ட அத்தி யாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி  நேற்று (29.7.2022) தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெல்லம், மோர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் கள் மீது ஒன்றிய அரசு 5 சதவீதம் ஜிஎஸ்டி  வரி விதித்து அமலாக்கி யுள்ளது. 

இது நாடு முழு வதும் உள்ள ஏழை, எளிய  மக்களின் அன்றாட வாழ்வில் கடுமையான தாக்குதலாக மாறி யுள்ளது. 

உழைப்பாளி மக்களின் வாழ்வா தாரம் மீது மோடி அரசு ஏவியுள்ள இத்தாக்குதலைக் கண் டித்து கட்சியின் மாநிலக்குழு முடிவின் அடிப்படையில் அனை த்து மாவட்டங்களிலும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் நடைபெற்ற போராட் டத்தில் கட்சியின் மாநில செய

லாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற் றார். 

மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத் மத்திய சென்னையிலும், உ.வாசுகி தென் சென்னையிலும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment