அய்.சி.டி (ICT) அகாடமி சார்பாக 13.07.2022 அன்று சென்னை வர்த்தக மய்யத்தில் நடைபெற்ற “அய்.சி.டி அகாடெமி - பிரிட்ஜ் (Bridge) 2022” புதிய திறன்கள் மூலம் இந்தியாவுக்கு புத்துயிர்(Revitalizing India Through New Ag Skills) அளிப்பதற்கான மிகப்பெரிய அளவிலான தொழில்கூட நிறுவனத்தின் நிகழ்வில் தமிழ்நாடு அரசு தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் அமேசான் இணைய சேவை(AWS: Amazon Web Service) அகாடெமியின் நிறுவன உறுப்பினர்கள் சான்றிதழை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வழங்கினார்கள். மேலும் புதியதாக நமது பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் அய் சி டி (ICT) அகாடெமி மற்றும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து அமேசான் இணைய சேவைகளுக்கான உயராய்வு மய்யம் நிறுவப்படவுள்ளது.
இவ்விழாவில் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வீ. அன்புராஜ் மற்றும் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் முனைவர். பி.கே. சிறீவித்யா; பல்கலைக்கழக அய்.சி.டி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம்.ஷர்மிளா பேகம், துணை பேராசிரியர்கள் முனைவர் பி.குரு, ஆர்.ராகேஷ் மற்றும் பி.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment