புதுடில்லி, ஜூலை 14- அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
ராணுவத்தின் முப்படைகளிலும் 4 ஆண்டு காலத்துக்கு பணி யாற்றும் ‘அக்னிபாத்’ என்ற திட்டத்தை கொண்டுவர ஒன்றிய அமைச்சரவை கடந்த ஜூன் 14ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அதன்படி 17 வயது முதல் 21 வயதுள்ள இளை ஞர்கள் முப்படைகளிலும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். முதல் கட்டமாக விமானப் படையில் அதற்கான விண் ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.
வழக்குரைஞர் ஹர்ஸ் அஜய் சிங் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு மறுபரி சீலனை செய்ய வேண்டும். இத்திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன.இதில் அக்னி வீரர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. அதனால் அக்னிபாத் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’’என கூறியுள்ளார்.
வழக்குரைஞர் எம்.எல்.சர்மா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘அக்னிபாத் திட்டம் சட்டவிரோத மானது, அரசமைப்புக்கு எதிரானது’’ என கூறியுள்ளார்.இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என ஒன்றிய அரசு சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை விசாரிக்கிறது.
No comments:
Post a Comment