இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை

புதுடில்லி, ஜூலை 14- கிழக்கு லடாக் பிரச்சினை தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் 17ஆம் தேதி பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். 

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கையால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இதுவரை நடந்த பேச்சு வார்த்தைகளின் பலனாக எல்லையில் சில சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்பப் பெற்றன. எனினும் டெம்சோக், தேப்சாங் உள்ளிட்ட பகுதி களில் படைகளை திரும்பப் பெற சீனா மறுத்து வருகிறது. 

இந்த நிலையில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 16ஆவது சுற்று பேச்சுவார்த்தை வருகிற 17ஆந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 


No comments:

Post a Comment