இதுதான் பாஜக ஆளும் மாநில அரசின் அவலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

இதுதான் பாஜக ஆளும் மாநில அரசின் அவலம்

இறந்து போன 2 வயது தம்பியின் உடலுடன் சாலையில் பசியோடு அமர்ந்திருந்த 8 வயது தாழ்த்தப்பட்ட சமூக சிறுவன்

போபால், ஜூலை 11 உயிரிழந்த தனது சகோதரனின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் 8 வயது தாழ்த் தப்பட்ட சமூக சிறுவன் சாலை யில் அமர்ந்திருந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. 

மத்தியப்பிரதேசம், மொரோனா மாவட்டத்தில் உள்ள அம்பா கிராமத்தை சேர்ந்தவர் பூஜாராம் தாழ்த்தப் பட்டவகுப்பைச் சேர்ந்த இவர்  கூலித்தொழிலாளி. இவ ருக்கு 8 மற்றும் 2 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். பூஜா ராமின் 2 வயது மகனுக்கு கடந்த சில நாட் களுக்கு முன்பு கல்லீரல் பாதிக்கப் பட்டது.

சிறுவனது உடல் நிலை மோச மானதை அடுத்து மொரோனா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். இவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல ஆம் புலன்ஸ் வசதியை மருத்துவ மனை நிர்வாகம் செய்து தர வில்லை. மருத்துவமனை வளாகத் திற்கு வெளியே உள்ள ஆம்புலன் சில் ஆயிரத்து அய்ந் நுறு ரூபாய் கேட்டுள்ளனர். இதனால் வேறு இடத்தில் சென்று வாகனம் தேடி வருவதாக கூறி தனது மூத்த மகன் மற்றும் உயிரிழந்த மகனின் உடலை அங்குள்ள ஒரு பூங்கா விற்கு அருகே வைத்து விட்டு சென்றார்.

தனது சகோதரனின் உடலுடன் பசியோடு 8 வயது சிறுவன் சாலையில் அமர்ந் திருந்தான். இந்த நிகழ்வை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அவர் அங்கி ருந்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார்.இதனை அடுத்து காவல் துறையினர் சிறுவனின் உடலை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்து கொடுத் தனர். 

உத்தரப்பிரதேசம் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங் களில் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான் மையின மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதி களும் செய்து தராமல் அவர்களிடமிருந்து கோரிக்கை வந்தாலும் அதை ஏற்காமல் நிரகரிக்க மறைமுக உத்தரவு வந்த நிலையில் இறந்த உறவு களின் உடலை சைக்கிளில் கொண்டு செல்வது, கம்பளியில் சுற்றி இழுத்துச்செல்வது தோளில் சுமந்து செல்வது, கயிற்றுக் கட்டிலில் வைத்து தூக்கிச்செல்வது என்பது பொதுவான ஒன்றாக மாறிவிட்டது, 

எட்டு வயது சிறுவன் மடியில் தனது தம்பியின் உடலை வைத்துக் கொண்டு பல மணி நேரம் பட்டி னியால் சாலை ஓரம் அமர்ந்திருந்த காட்சி மனிதாபிமானம் உள்ள அனைத்து மக்களின் உள்ளத் தையும் வேதனையில் ஆழ்த்திவிட்டது


No comments:

Post a Comment