ஆசிரியரிடம் விடுதலை சந்தா வழங்குதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

ஆசிரியரிடம் விடுதலை சந்தா வழங்குதல்

 

தாம்பரம் கழக மாவட்டத் தலைவர் ப.முத்தையன் - அவரின் இணையர் நாகவள்ளி ஆகியோர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 4  முழு ஆண்டு  மற்றும் 11 அரையாண்டு விடுதலை சந்தாவை  வழங்கினர். உடன்: கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் (பெரியார் திடல்- 09.07.2022). வடலூர் கழக மண்டல மகளிரணிச் செயலாளர்  ரமாபிரபா ஜோசப், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து  11 விடுதலை சந்தாவை  வழங்கினார்.(பெரியார் திடல்- 09.07.2022). கழக மகளிரணி தோழர் க.பார்வதி மற்றும் சி.வெற்றிச்செல்வி பூங்குன்றன் ஆகியோரின்  பிறந்தநாள் பரிசாக ஒரு ஆண்டு விடுதலை சந்தா ரூ2000, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ,பெரியார் பிஞ்சு நிரஞ்சனா அம்பேத்கர் (த/பெ  சந்திரபோஸ் அம்பேத்கர்) வழங்கினார்.(பெரியார் திடல்- 09.07.2022).

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘விடுதலை' சந்தா சேகரிப்பு பணி  

காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் டி.ஏ.ஜி.அசோகன் 5 ஆண்டு விடுதலை சந்தா அளித்தார்.  காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் இ.இரவீந்திரன் 20 சந்தா ரசீதும்,  காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் செ.ரா.முகிலன் 20 சந்தா ரசீதும், காஞ்சிபுரம் மாநகர திராவிடர் கழக  செயலாளர் வேலாயுதம்  இருபது ரசீதும், காஞ்சிபுரம் மாநகர திராவிடர் கழக தலைவர் கி .இளையவேல் 20 சந்தா ரசீதும், காஞ்சிபுரம் ஒன்றிய திராவிட கழக அமைப்பாளர் அ.வெ. முரளி 20 விடுதலை சந்தா ரசீதும், வாலாஜாபாத் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் ஆ. மோகன் 20 விடுதலை சந்தா இரசீதும் மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடமிருந்து பெற்றுக்கொண்டனர் .

செய்யாறு மாவட்டத்தில் ‘விடுதலை' சந்தா சேகரிப்பு பணி  

திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் வெ. இளஞ்செழியன்  20 சந்தா ரசீதுகளும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வி. வெங்கட்ராமன்- தமிழ்மொழி இணையர் பத்து சந்தா ரசீதுகளும்,  கழகப் பொதுக்குழு உறுப்பினர் தி.காமராஜ்  25 ஆண்டு விடுதலை சந்தாவும்,  மண்டல மாணவர் கழக செயலாளர் பெருங்களத்தூர் வெங்கடேசன் பத்து சந்தா ரசீதும்,  கழகப் பொதுக்குழு உறுப்பினர் 

என். வி. கோவிந்தன்  மூன்று ஓர் ஆண்டு சந்தா வழங்கியதுடன், 20 சந்தா ரசீதும்,  செய்யாறு மாவட்ட திராவிடர் கழக தலைவர்  அ. இளங்கோவன் 25 ஆண்டு விடுதலை சந்தாவும், செய்யாறு மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பொன்.சுந்தர் இருபது சந்தா ரசீதும்,  செய்யாறு நகர திராவிடர் கழக செயலாளர் கெஜபதி பத்து சந்தா ரசீதும்,  மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் சீனிவாசன் பத்து சந்தா ரசீதும்,  செய்யாறு தொழிலதிபர் ஜெயக்குமார் பத்து சந்தா ரசீதும்,   திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணித்தலைவர்  எழில் பத்து சந்தா ரசீதும்,  பெருந்தகையாளர் வடிவேல் -சாந்தி இணையர் 10 சந்தா ரசீதும்,   திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.வேல்முருகன்  வாழ்நாள் விடுதலை சந்தாவும்,   மெடிக்கல்ஸ் உரிமையாளர் எஸ். குணாளன் ஓராண்டு விடுதலை சந்தாவும்,  ஜெயம் டெக்ஸ்டைல் உரிமையாளர் ஜெ. கிருபாகரன் 10 சந்தா ரசீதும், செய்யாறு எஸ். அரவிந்த் பத்து சந்தா ரசீதும்,  செய்யாறு நகர திராவிடர் கழகத் தலைவர் தங்கம் பெருமாள் பத்து சந்தா ரசீதும்,  வடமணப்பாக்கம் தந்தை பெரியார் தேநீர் விடுதி உரிமையாளர் பொன். பழனி ஓர் ஆண்டு சந்தாவும்,   செய்யாறு ஆசிரியர் வ. சரவணன் 5 ஆண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் பத்து சந்தா இரசீதுகளையும் மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மற்றும் கழகப் பொறுப்பாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.  

பொன்னேரியில் '60 ஆயிரம் 'விடுதலை' சந்தா சேர்ப்புப் பணியை வேகப்படுத்திடும் வகை யில் கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் அமைப்புச் செயலாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன் மாவட்டச் செயலாளர் ரமேஷ், மண்டலச் செயலாளர் தே.செ.கோபால் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்துக் கொண்டனர்.   மாவட்ட மகளிர் பாசறை பொறுப்பாளர் செல்வி வினோத் 5ஆண்டு சாந்தாவிற்கான தொகை ரூ. 10,000/- கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். உடன் அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால் உள்ளனர். (10.7.2022)


No comments:

Post a Comment