சேலம், ஜூலை 26 சேலம் அல்லிக்குட்டையை சேர்ந்தவர் கமலநாதன். இவரது மகன் நிவாஷ்(26). மெக்கானிக்கல் பொறியாளரான இவர், அய்.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15ஆம் தேதி, மணல் மார்க்கெட் அருகில் இருசக்கரவாகனத்தில் சென்றபோது, தனியார் பேருந்து மோதி படுகாயம் அடைந்தார்.
தனியார் மருத்துவமனையில் கோமா நிலைக்கு சென்றதால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூளைச்சாவு நிலையை அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை கொடையாக அளிக்க தாய் நவமணி தெரிவித்தார். அதன்படி, இதய வால்வு, தோல், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை எடுக்கப்பட்டு சென்னை, சேலம், கோவை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment