கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரியார் 1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 29, 2022

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரியார் 1000

கன்னியாகுமரி, ஆக. 29- பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியா குமரி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் பெரியார் ஆயிரம் வினா விடைப் போட்டி நடத்தப்பெற்றது. 

தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பெரியாருடைய கருத்து களை மாணவர்களுக்கு எடுத்து சொல்லும் வகை யில் குமரி மாவட்டம் தக்கலை அமலா கான் வென்ட் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாடத்திட்டுவிளை லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளி நாகர்கோவில்  கார்மல் மேல்நிலைப் பள்ளிகளில்  பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் பெரியார் சிந் தனை உயராய்வு மய்யம் சார்பாக பெரியார் 1000 வினா விடைப்  போட்டி  சிறப்பாக நடந்தது.

மாணவர்கள்   ஆர்வமு டன் தேர்வு எழுதினர். கார்மல் மேல் நிலைப் பள்ளியில் மாவட்ட கழக தலைவர் மா.மு சுப்பிர மணியம் போட்டியினை தொடங்கிவைத்தார். தக்கலை அமலா கான் வென்ட் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில்  மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் போட்டியினை தொடங்கிவைத்தார். தக்கலை அமலா கான் வென்ட் மகளிர் மேல் நிலைப் பள்ளியில் மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் போட்டியினை தொடங்கி வைத் தார்.  மாடத்திட்டுவிளை லாரன்ஸ் மேல் நிலைப் பள்ளியில் பகுத்தறிவா ளர்கழக மாவட்ட தலை வர் உ.சிவதாணு போட்டியினை தொடங்கி வைத் தார். பக செயலர் பெரியார் தாஸ், ஒன்றிய தலைவர் ராஜீவ்லால் ஆகியோர் பங்கேற்றனர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக பேராசிரியர் நாரா யணன், நவநீத கிருஷ்ணன் போட்டியினை ஒருங்கி ணைத்தனர்,  கார்மல் பள்ளியில்  தமிழ் ஆசிரியர்  டோமினிக் ராஜ் போட் டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். குமரி மாவட்டத்தில் பெரும் பாலான பள்ளிகளிலும் போட்டி நடைபெறுகின் றது.

No comments:

Post a Comment