அரியலூர் மாவட்டத்தில் பெரியார் 1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 29, 2022

அரியலூர் மாவட்டத்தில் பெரியார் 1000

அரியலூர், ஆக. 29- அரியலூரில் பெரியார் 1000 வினா விடை போட்டி மூன்றாம் கட்ட தேர்வு 25.08.2022 அன்று பொய் யாத நல்லூர்  அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இலுப்பையூர் ஊராட்சி மன்ற  தலைவர் அன்பழகி தெய்வராசு, மாணவ மாணவிகளுக்கு வினாத்தாள் வழங்கினார்  பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முல்லைக்கொடி விடைத்தாள் வழங்கி துவக்கி வைத் தனர். 

மற்றும் திராவிட கழக அரியலூர் ஒன்றிய செயலாளர் மு.கோபாலகிருட் டிணன் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தலைவர் சார்பாக தேநீர் மற்றும் மெதுவடை வழங்கினார்கள். 

அரியலூரில் பெரியார் 1000 வினா விடை போட்டி மூன்றாம் கட்ட தேர்வு 25.08.2022 அன்று இலுப்பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனியம்மாள் கந்தசாமி மாணவ மாணவிகளுக்கு வினாத்தாள்களை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் விசயராணி, விடைத்தாள் வழங்கி துவக்கி வைத்தார்.  கலந்து கொண்ட அனைத்து மாணவ-மாண வியருக்கும் துணைத் தலைவர் சார்பாக தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கினார் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக வினா விடை போட்டியின் ஒருங்கிணைப்பா ளர் திராவிட கழக அரியலூர் ஒன்றிய செயலாளர் மு. கோபாலகிருட்டிணன் மற்றும் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கள் மா.முருகானந்தம், க.சசிப்பிரியா, செ.பாலமுருகன், சே.அய்ஸ்வர்யா அனைவருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.

No comments:

Post a Comment