சென்னை, ஆக. 10- சென் னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு வரும் 17ஆம் தேதி நடக்க உள்ளதாக தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் முனை வர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல் வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தலைமையில் அண்ணா மலை பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், உயர்கல்வித் துறை செயலர் உள் ளிட்டஅதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நேற்று முன் தினம் (8.8.2022) நடந்தது.
பின்னர், செய்தியாளர் களிடம் அமைச்சர் முனைவர் க.பொன்முடி கூறியதாவது,
சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகம் தனியாரிடம் இருந்த போது, 1,573 ஆசிரியர்கள், 4,277 ஊழியர்கள் கூடுத லாக இருந்தனர். இத் தனை பேருடன் அந்த பல்கலைக்கழகம் 2013இல் அரசுடமை ஆக்கப்பட்டது.
இதன் பிறகு, கூடுத லாக இருந்த ஆசிரியர் களில் 1,204பேர், மற்ற அரசு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டு, எஞ்சிய 369 பேர்அண்ணாமலை பல்க லைக்கழகத்திலேயே பணியாற்றுகின்றனர். ஊழியர்களில் 3,246 பேர் மற்ற கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டு, எஞ்சிய 1,031 பேர்அண்ணாமலை பல்க¬ லக்கழகத்திலேயே வேலை செய்கின்றனர்.
ரூ.1,000 முதல் ரூ.10,000 ஊதியத்தில் வேலை பார்க்கும் 417 தற்காலிக பணியாளர்கள் மாற்றப்படவில்லை. இவர்களுக்கு 3 மாத பணி நீட்டிப்பு வழங்க முதல மைச்சர் உத்தரவிட்டார். அவர்கள் மேலும் பணி நீட்டிப்பு கேட்டுள்ளனர்.
‘உயர்கல்வியில் வெளி நாட்டு மொழிகளையும் கற்றுத் தரவேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பாடத் திட்டங்கள் இருக்க வேண்டும்’ என்று முதல மைச்சர் அறிவுறுத்தி உள் ளார். துணைவேந்தர்களு டன் கலந்துபேசி, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இதை அனைத்து கல்லூரிகளிலும் செயல் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு கலை, அறிவி யல் கல்லூரிகளில் மாண வர் சேர்க்கை நடந்து வரு கிறது. கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிக ளில் சமூக நீதி அடிப்படையில்தான் கலந்தாய்வு நடைபெறும்.
அண்ணா பல்கலைக் கழகத்தில் பாடத் திட் டங்களை மாற்றி அமைக் கும் பணிகள் முடிந்துள் ளன. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளி யாகும். இந்த ஆண்டு சேரும் மாணவர்கள் அந்த பாடத் திட்டத்தை தான் பின்பற்றுவார்கள்.
சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மாநாடு வரும் 17ஆம் தேதி நடக்க உள்ளது. பல்கலைக்கழக பாடத் திட்டங்களில் உள்ள சில பிரச்சினைகள், அண்ணா மலை பல்கலைக்கழக ஊழியர்களின் பணி, கல்லூரி கலந்தாய்வில் சமூக நீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டில் பின்பற்றும் நடைமுறை கள் குறித்து இதில் ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment