புதுடில்லி, ஆக. 10- கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையிலான கடந்த நிதி ஆண்டுக்கான பிரதமர் மோடியின் சொத்து விவரம், பிரதமர் அலு வலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளது.
அதன்படி, முந்தைய ஆண்டை விட அவரது அசையும் சொத்துகள் ரூ.26 லட்சத்து 13 ஆயிரம் உயர்ந்துள்ளது. தற்போ தைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 23 லட்சம். அவற்றில் பெரும்பாலா னவை வங்கி டெபா சிட்கள் ஆகும். கடந்த 2002ஆம் ஆண்டு, குஜ ராத் மாநில முதலமைச்ச ராக இருந்தபோது, காந்தி நகரில் வேறு 3 பேருடன் சேர்ந்து ஒரு வீட்டும னையை மோடி வாங்கி இருந்தார். அதில் 4 பேருக் கும் சமபங்கு உள்ளது. தனது ஒரே அசையும் சொத்தான அந்த நிலத் தில் தனது பங்கை அவர் நன்கொடையாக அளித்து விட்டார். அதனால் அவரிடம் எந்த அசையா சொத்தும் இல்லை. வாக னமும் இல்லை.
கடன் பத்திரங்கள், பங்குகள், பரஸ்பர நிதியம் ஆகியவற்றில் எந்த முதலீடும் இல்லை. கைவசம் ரொக்கமாக ரூ.35 ஆயிரத்து 250 வைத் துள்ளார். அஞ்சலகத்தில் ரூ.9 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரங்களும், ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள எல்.அய்.சி. பாலிசிகளும், ரூ.1 லட் சத்து 73 ஆயிரம் மதிப் புள்ள 4 தங்க மோதிரங் களும் வைத்துள்ளார்.
No comments:
Post a Comment