சென்னை, ஆக. 10- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளராக இரா. முத்தரசன் தேர்வு செய்யப்பட்டார். திருப்பூ ரில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கி நான்கு நாட் கள் நடை பெற்றது. இம் மாநாட்டில் இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செய லாளராக இரா. முத்தர சன் மூன்றாவது முறையாக தேர்வு செய் யப்பட்டார். அத்துடன் இந்திய கம்யூ னிஸ்ட் கட் சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவராக கே.சுப்பரா யன் தேர்வு செய்யப்பட் டார். இம்மாநாட்டின் நிறைவாக இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் செந்தொண்டர் பேரணி நடைபெற்றது. திருப்பூர் நொய்யல் பாலம் அருகே மாநகராட்சி சாலை வளர் மதி பேருந்து நிறுத்தம் முன்பாக இந்த பேர ணியை வாழ்த்தி மார்க் சிஸ்ட் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.
முதலமைச்சர் வாழ்த்து
“மூன்றாவது முறை யாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளராகத் தேர்ந்தடுக்கப்பட்டுள்ள அன்புத் தோழர் முத்தரசன் அவர் களுக்கு வாழ்த்துகள். சமத்துவத்தை நோக்கிய பொதுவுடைமைப் பாதை யில் நமது இலட்சியத்தை நோக்கி தொடர்ந்து பீடு நடை போட வாழ்த்துகி றேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட் டர் பதிவில் வாழ்த்துக ளைத் தெரிவித்துள்ளார்.
கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து
சிபிஅய் மாநிலச் செய லாளராக மூன்றாவது முறையாக தேர்வு செய் யப்பட்டுள்ள தோழர் இரா.முத்தரசனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக் கள் என்று சிபிஎம் மாநி லச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment