மதுரை, ஆக. 10- நாட்டின் 48ஆவது ஜிஎஸ்டி கூட் டம் ஆகஸ்ட் 4ஆவது வாரத்தில் மதுரையில் நடைபெற இருக்கிறது. இதனால், தேசிய அள வில் மதுரை கவனம் பெறத் தொடங்கி உள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஒன்றிய அர சால் கொண்டு வரப்பட் டது.
மாநில அரசுகள் ஜிஎஸ்டியில் கூறும் குறைபாடுகள், ஆலோ சனைகளைப் பற்றி விவாதித்து சீர்திருத்தம் செய்ய நாட்டின் முக்கிய நகரங்களில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
தற்போது வரை 47 ஜிஎஸ்டி கூட்டங்கள் நடந்துள்ளன. சண்டிக ரில் நடந்த கடைசிக் கூட் டத்தில் 48ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த ஒன்றி நிதியமைச்சகம் முடிவு செய்து அறிவித்தது.
இந்தக் கூட்டத்தை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த முடிவான நிலை யில் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட், அதைத் தொடர்ந்து நடைபெறும் சுதந்திர தின விழாக் கொண் டாட்டத்தால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தள் ளிப் போனது.
தமிழ்நாடு நிதி அமைச் சர் பழனிவேல் தியாகரா ஜன் சில நாட்களுக்கு முன், மதுரையில் ஜிஎஸ்டி கூட்டம் ஆக.4ஆவது வாரம் நடைபெறும் என கூறியிருந்தார். இக்கூட் டத்தில் அனைத்து மாநி லங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், நிதித் துறைச் செயலர்கள், மக் கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
ஜிஎஸ்டி அறிமுக மாகி இதுவரை 47 கூட் டங்கள் நடந்த நிலையில் இந்தக் கூட்டம் முதல் முறையாக தமிழ்நாட்டில் நடப்பது குறிப்பிடத்தக் கது. ஜிஎஸ்டி கூட்டங்கள் பெரும்பாலும் மாநிலத் தலைநகரங்கள், பெரிய நகரங்களில் மட்டுமே நடந்துள்ளன.
தற்போதுதான் முதல் முறையாக மாநிலத் தலை நகரைத் தாண்டி மது ரையில் முக்கியத்துவம் வாய்ந்த ஜிஎஸ்டி கூட் டம் நடைபெற இருக் கிறது. அதனால்,தேசிய அளவில் மதுரை கவனம் பெறத் தொடங்கி உள்ளது.
ஜிஎஸ்டி தொடர்பாக பல்வேறு குறைபாடுக ளைச் சுட்டிக்காட்டி வந்த தென் தமிழ்நாட் டைச் சேர்ந்த வணிகர்கள், இந்தக் கூட்டம் மதுரை யில் நடைபெறுவதால் தற்போதே அதில் விவா திக்க வேண்டிய அம்சங் களைப் பற்றி தமிழ்நாடு அரசுக்கும், நிதி அமைச்ச ருக்கும் மனுக்களை வழங்கி வருகின்றனர்.
சமீபத்தில் இந்தக் கூட்ட ஏற்பாடுகள் குறித் தும் தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு வலியு றுத்த வேண்டிய விவகா ரங்கள் குறித்தும் முதல மைச்சர் ஸ்டாலின் தலை மையில் முக்கிய அமைச் சர்கள், அரசுத் துறைச் செயலர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
நாட்டின் முக்கிய நிதித்துறை ஆலோச னைக் கூட்டம் மட்டுமில் லாது அந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில மக்கள் பிரதிநிதிகள் வர இருப்பதால் மதுரையின் முக்கியச் சாலைகள், சுகாதார வச திகளை மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து மேம்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
No comments:
Post a Comment