ஆகஸ்ட் 15இல் கிராம சபைக் கூட்டம்: தமிழ்நாடு அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

ஆகஸ்ட் 15இல் கிராம சபைக் கூட்டம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, ஆக. 10- சுதந்திர தினத்தில் நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் விவா திக்கப்பட வேண்டியவை என்னென்ன? என்பது பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் தாரேஷ் அகமது அனுப் பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது, 1998ஆம் ஆண்டு நவம்பரில் பிறப் பிக்கப்பட்ட அரசாணையின்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரத் தினத் தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப் பட வேண்டும். இந்தக் கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும். 

மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்வதற்கு ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் தெரியப்படுத்தப்பட வேண்டும். இந்த கூட்டத்திற்கான செலவு வரம்பு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கூட்டம் தொடர் பான அறிக்கையை அர சுக்கு 22ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர்கள் அனுப்பி வைக்க வேண்டும். 

கிராம ஊராட்சி நிர் வாகம், பொது நிதிச் செல வினம், குடிநீரை சிக்கன மாக பயன்படுத்துவது, கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக் கும் நடவடிக்கை, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை பறக்கவிடுதல் ஆகியவை பற்றி விவா திக்க வேண்டும். மேலும், தனிநபர் சுகாதாரம், சுற் றுப்புற தூய்மை, எழில் மிகு கிராமம் பற்றிய விழிப்புணர்வு, கழிப்பறை பயன்பாடு, குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரித் தல், திடக்கழிவு-திரவக் கழிவு பற்றிய விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு, மாற்றுப் பொருட் கள் பயன்பாடு பற்றியும் விவாதிக்க வேண்டும். மேலும், மழைநீர் சேக ரிப்பு, நீர்வழிப்பாதை, நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுதல், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் மறுகணக் கெடுப்பு, ஜல்ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமர் குடியிருப்புத் திட்டம் பற்றியும் விவாதிக்க வேண் டும். மேலும், இந்தத் திட்டம் சார்ந்த குறை பாடுகளை மக்கள் குறை தீர் மய்யத்தில் 8925422215 மற்றும் 8925422216 ஆகிய எண்களில் நேரடியாக பேசி தெரிவிக்கும் வசதி பற்றி மக்களிடம் தெரிவித்தல், சமூக பொருளா தார ஜாதிவாரி கணக் கெடுப்பு, நிலமற்றவர்க ளுக்கு ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங் களில் வீட்டுமனை பட்டா வழங்குவது ஆகிய விஷ யங்கள் பற்றி கிராம சபை யில் விவாதிக்க வேண்டும். 

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment