புதுடில்லி, ஆக.26 குஜராத் சட்டமன்ற தேர்தலை யொட்டி, ராகுல்காந்தி செப்டம்பர் 5ஆம் தேதி தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளி யாகி உள்ளது. அதுபோல முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிடப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. பாஜகவுக்கு எதிராக ஆம்ஆத்மி கட்சி களமிறங்கி உள்ளது. பொதுமக்களுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம், பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என பல்வேறு அறிவிப்புகளை கெஜ்ரிவால் வெளியிட்டு மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறார்.
இந்த நிலையில், காங் கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை செப்டம்பர் 5ஆம் தேதி ராகுல் காந்தி தொடங்கி வைக்க இருப்ப தாக அறிவிக்கப்பட்டுள் ளது. அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ”சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை ராகுல் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கி வைப்பார். அதைத் தொடர்ந்து முதற் கட்ட வேட்பாளர் பட்டி யல் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிடப் படும்” என்றார்.
குமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ’ பாத யாத்திரையை செப் டம்பர் 7ஆம் தேதி ராகுல் தொடங்க உள்ள நிலையில் அதற்கு 2 நாள் முன்னதாக அகமதாபாத்தில் பிரச்சா ரம் மேற்கொள்கிறார். பாஜவின் கோட்டையான குஜராத்தில் அக்கட்சி சுமார் 30 ஆண்டாக ஆட்சி நடத்தி வருகிறது. இம்முறை, பாஜ, காங்கிரஸ் மட்டு மின்றி ஆம் ஆத்மியும் குஜராத்தில் போட்டியிட உள்ளது. ஏற்கெனவே ஆம் ஆத்மி, 2 கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட் டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு போட்டி கடுமையாக உள்ளது.
No comments:
Post a Comment