உச்சநீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

உச்சநீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி

புதுடில்லி,ஆக. 11- நாட்டின் 49 ஆவது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை குடி யரசுத் தலை வர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார். யு.யு.லலித் வரும் 27ஆம் தேதி பதவியேற் பார். 74 நாள்கள் மட்டுமே இவர் இந்தப் பதவியில் இருப்பார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இம் மாதம் 26 ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதி என்.வி.ரமணா வுக்கு ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 3 ஆம் தேதி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து மரபுப்படி உச்சநீதி மன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான யு.யு.லலித்தின் பெயரை அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு என்.வி.ரமணா மறுநாளே பரிந்துரை செய்தார். சட்ட அமைச்சகம் இந்தப் பரிந்துரையை குடியரசுத் தலை வருக்கு அனுப்பி வைத்தது.


No comments:

Post a Comment