திருச்சி, லால்குடி, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மண்டல கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

திருச்சி, லால்குடி, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மண்டல கலந்துரையாடல் கூட்டம்

 திருச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது

திருச்சி, ஆக. 13  திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை அன்னை ஈ.வெ.ரா மணியம்மை அரங் கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலை மையில் நடைபெற்றது முன்னதாக திருச்சி மாவட்ட தலைவர்  ஞா.ஆரோக் கியராஜ் வரவேற்புரையாற்றினார். 40 நாட்களில் 60 ஆயிரம் விடுதலை சந் தாக்கள் என்கிற இலக்கோடு தமிழ்நாடு முழுவதும் களம் இறங்கி பணியாற்றும் கழகத் தோழர்கள் மண்டல வாரியாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை சந்தாக் களை பெற்று வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் நேற்று (12.8.2022) நடைபெற்ற மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில், கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குண சேகரன் மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், சிவகங்கை மண் டல செயலாளர் சிகாமணி, புதுக் கோட்டை மாவட்ட தலைவர் முனை வர் அறிவொளி, காரைக்குடி மாவட்ட செயலாளர் வைகறை, அறந்தாங்கி மாவட்ட செயலாளர் மாரிமுத்து, லால் குடி மாவட்ட செயலாளர் அங்கமுத்து, பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு,  சிவகங்கை மாவட்ட துணை தலைவர் வேம்பத்தூர் ஜெயராமன், கரூர் மாவட்ட தலைவர் குமாரசாமி, திருச்சி மண்டல தலைவர் ஆல்பர்ட், திருச்சி மண்டல செயலாளர் மணி வண்ணன்,  ப.க.மாநில துணைத்தலைவர் பொன்னமராவதி ஆசிரியர் சரவணன்,  திருச்சி மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அம்பிகா, அரியலூர் மாவட்ட தலைவர் நீலமேகம், புதுக்கோட்டை மண்டல தலைவர் ராவணன், அரியலூர் மண்டல தலைவர் பொறியாளர் கோவிந்தராஜன், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்

பாராட்டு

இந்நிகழ்ச்சியில் ஜூலை 30 ஆம் தேதி அரியலூரில் நடைபெற்ற மாநில இளைஞரணி மாநாட்டிற்காக உழைத்த அரும்பணியாற்றிய மாநாட்டு பொறுப் பாளர்கள் மற்றும் தோழர்கள் அரிய லூர் மாவட்ட தலைவர் நீலமேகம், மண்டல செயலாளர்கள் கோவிந்தராஜ், மண்டல இளைஞரணி செயலாளர் பொன் செந்தில்குமார், மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன், அரிய லூர் ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சிவக்கொழுந்து, செந்துறை ஒன்றிய தலைவர் முத்தமிழ்செல்வன், மண்டல இளைஞரணி செயலாளர் திராவிட செல்வன் ஆகியோர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயன டைய அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் கழகத்தோழர்கள் மண்டல, மாவட்ட வாரியாக விடுதலை சந்தாக்களை கழகத் தலைவரிடம் வழங்கினர். 

அதனை தொடர்ந்து கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

கலந்து கொண்டோர்

 இக்கலந்துரையாடல் கூட்டத்தில்  மண்டல மாவட்ட ஒன்றிய நகர கழக பொறுப்பாளர்கள் காரைக்கு-டி பொதுக்குழு உறுப்பினர் திராவிடமணி, திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழர், லால்குடி மாவட்ட துணைத் தலைவர் உடுக்கடி அட்டலிங்கம், பெல்.ம.ஆறுமுகம், திருச்சி மாநகர தலைவர் துரைசாமி, திருவெறும்பூர் நகர தலைவர் கண்ணன், மண்டல  மகளிரணி செயலாளர் கிரேசி, கழக காப்பாளர் அரங்கநாயகி, மண்டல மகளிரணி தலைவர் ரெஜினாமேரி, ப.க. தலைவர் மதிவாணன், துணைத் தலைவர் குத்புதீன், மணியன், பென்னி, பீமநகர் முபாரக், மாநகர அமைப்பாளர் கனகராஜ், காட்டூர் காமராஜ், ரூசோ, இளைஞரணி பிரவீன்குமார், மாணவர் கழக கருப்பு கோகுல், குமரேசன், மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவுச்-சுடர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறை வாக மாவட்ட செயலாளர் இரா. மோகன்தாஸ் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment