எழும்பூரில் கைவினை பொருட்கள் கண்காட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

எழும்பூரில் கைவினை பொருட்கள் கண்காட்சி

சென்னை, ஆக.25 கிராவிட்டி ஈவென்ட் அஃபயர்ஸ் நிறுவனம் கைவினைஞர்கள், நெசவாளர்கள், விற்பனை யாளர்களுடன் இணைந்து, தென்னிந்திய கலை மற்றும் கைவினைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் கிரா விட்டி கண்காட்சியை நாடு முழுவதும் நடத்தி வருகிறது.

வெள்ளி, ரத்தினக்கல் பதித்த கைவினை ஆபர ணங்கள் வீட்டு அலங்கார ஓவியங்கள், கைத்தறி துணி வகைகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் வாங்க சென் னையில் கிராவிட்டி ஈவென்ட்ஸ் நடத்தும் கண்காட்சியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் கடந்த ஆக.19-ஆம் தேதி கண்காட்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வரு கிறது. வரும் 28-ம் தேதி வரை நடைபெறும் இக்கண் காட்சியை காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை காணலாம்.

இங்கு சிறந்த ஆடைகள், கைத்தறி பட்டு, கையால் ஆன ஆபரணங்கள் வீட்டு அலங்காரப் பொருட்கள், கலைப் பொருட்கள் உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பட்டு புடவைகள் கிடைக்கின்றன. மேலும் குறிப்பிட்ட பகுதிகளின் தனிச்சிறப்பு வாய்ந்த துணி வகைகளையும் வாங்க முடியும். பழங்குடியினரால் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட நகைகளையும் காணலாம்.


No comments:

Post a Comment