சென்னை, ஆக.25- பொறியியல் படிப்பில் சேரு வதற்கான பொறியியல் கலந் தாய்வு ஆக.25இல் தொடங்கி அக் டோபர் 21-ஆம் தேதி முடி வடையும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் நீட் தேர்வு முடிவுகள் இன் னும் வெளி வராததால் கலந் தாய்வு மாணவர்கள் மருத் துவப் படிப்புகளில் சேர இடம் கிடைக்கும்பட்சத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேராமல் மருத்துவ படிப்புக்கு சென்று விடுவார்கள். இதனால் பொறியியல் கல்லூரிகளில் நிறைய காலி இடங்கள் ஏற்பட்டு விடும். இப்படித்தான் கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் 631 இடங்கள் காலியாக இருந்தன. இதை தவிர்ப்பதற் காகத்தான் பொறியியல் கலந்தாய்வில் இடம் கிடைத்த 7 நாட்களுக்குள் மாணவர்கள் சேர வேண்டும். இல்லை யென்றால் அந்த இடம் காலியாக இருப்பதாக கருதப் பட்டு வேறு ஒருவருக்கு கொடுக்கப்படும் என்று புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 21-ஆம் தேதி வெளியாகும் என்பதை கருத்தில் கொண்டு பொறியியல் கலந்தாய்வு 25-ஆம் தேதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 28-ஆம் தேதிக்கு தள்ளிப்போவதால் தமிழ்நாட்டில் பொறியியல் கவுன்சிலிங் திட்டமிட்டபடி இன்று தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று (24.8.2022) செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நாளை (வியாழக் கிழமை) முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால் இன்னும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
அந்த தேர்வு முடிவுகளை பொறுத்துதான் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வை நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே பொறியியல் பொது கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவு வந்த பிறகு 2 நாட்கள் கழித்து பொது கலந்தாய்வு ஆரம்பிக்கப்படும். இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார். முன்னதாக பொறியியல் கலந்தாய்வை 1 வாரம் தள்ளி வைக்கலாமா? என்று உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி னார்கள். இதற்கு முன்பு ஏற்கெனவே ஆகஸ்டு 20-ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் 25-ஆம் தேதிக்கு அதை தள்ளி வைத்தனர். இப்போது நீட் தேர்வு முடிவு வெளியாகாததால் இன்னும் 1 வாரம் வரை தாமதம் ஆகும் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment