ஆதிச்சநல்லூரில் பனை ஓலை அச்சுடன் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

ஆதிச்சநல்லூரில் பனை ஓலை அச்சுடன் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

திருவைகுண்டம்,ஆக.25 ஆதிச்சநல் லூர் அகழாய்வுப் பணியில் முதுமக்கள் மூடி தாழியில் பனை ஓலை அச்சு கண்டறியப்பட்டுள்ளது.

திருவைகுண்டம் அருகே தாமிர பரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்ச நல்லூரில் ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் திருச்சி ஒன்றிய தொல்லியல் மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வுப் பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது.

இந்த அகழாய்வுப் பணியில் கிடைக் கும் பொருட்கள் அனைத்தும் இங்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இந்த அகழாய்வுப் பணியில் 80-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுதவிர தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம், சங்ககால வாழ்விடம் பகு திகள், அம்புகள், வாள், ஈட்டி, சூலம், தொங்கவிட்டான் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில், 1903ஆம் ஆண்டு அலெக்சாண்ட ரியா அகழாய்வு செய்த பகுதியில் நடந்து வரும் அகழாய் வுப் பணியில் தற்போது வித்தியாசமான முதுமக்கள் தாழி மூடி கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment