சென்னை,ஆக.25 இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப் பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர் களது மீன்பிடிப் படகி னையும் உடனடியாக விடுவிக்கவும், மீன்பிடிப் படகுகளின் உரிமை யாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்க ருக்கு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதல மைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 22.8.2022 அன்று நாகப் பட்டினம் மற்றும் மயி லாடுதுறை மாவட்டங் களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீன வர்கள் இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஜூன் மாதத்திலிருந்து தொடர்ச்சி யாக நடைபெறும் அய்ந் தாவது நிகழ்வாகும். இலங்கை கடற்படையினரின் இத்தகைய நட வடிக்கைகள் மீனவர்க ளின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிக்கிறது.
தற்போது வரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 94 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளது. அவற்றின் உரிமையாளர் கள் இலங்கை நீதிமன்றத் தில் நேரில் ஆஜராகி, அவர்களது படகிற்கான உரிமையைக் கோர வேண்டுமென்ற நிபந் தனையின் பேரிலேயே கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் விடுவிக் கப்பட்டுள்ளனர். தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் பட்ட அனைத்து மீன வர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத் துகிறேன் என்று அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment