சாவர்க்கர் சுவரொட்டிகளில் கையை வைத்தால் கையை வெட்டுவார்களாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

சாவர்க்கர் சுவரொட்டிகளில் கையை வைத்தால் கையை வெட்டுவார்களாம்

பெங்களூரு, ஆக.25 கருநாடகாவில் சுதந்திர தினத்தன்று பாஜக சார்பில் வைக்கப்பட்ட பதாகைகளில் மேனாள் பிரதமர் நேருவின் படம் நீக்கப்பட்டு, சாவர்க்கரின் படம் இடம் பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேனாள் முதல மைச்சர் சித்தராமையா வின் கார் மீது முட்டை வீசப்பட்டது. சிமோகா, மங்களூரு, உடுப்பி உள் ளிட்ட இடங்களில் சாவர்க்கரின் படம் கிழிக் கப்பட்டதால் வன்முறை ஏற்பட்ட‌து.

இந்நிலையில் பாஜக சார்பில் 23‍ஆம் தேதி முதல் 31ஆ-ம் தேதி வரை 8 நாட்களுக்கு சாவர்க்கர் ரத யாத்திரை தொடங்கப் பட்டுள்ளது. மைசூருவில் சாவர்க்கர் ரத யாத் திரையை மேனாள் முதல மைச்சர் எடியூரப்பா காவிக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சாவர்க்கர் படத்தால் அலங்கரிங்கப்பட்ட வாகனம் சாம்ராஜ்நகர், குடகு, மண்டியா, ராம் நகர் உள்ளிட்ட மாவட் டங்களில் சென்றது.

இதுகுறித்து எடி யூரப்பா கூறுகையில், ‘‘ஆங்கிலேயருக்கு எதி ராக போராடிய சாவர்க் கரை அவமதிக்கும் போக்கு அண்மைக் காலமாக அதி கரித்து வருகிறது. எனவே, மக்களுக்கு சாவர்க்கரின் வரலாறை போதிக்கும் வகை யில் சாவர்க்கர் ரத யாத் திரை நடத்தப்படுகிறது. இதில் உரை நிகழ்ச் சிகள், பாடல், நாடகம் போன்ற வையும் இடம் பெறும் சாவர்க்கர் சுவரொட்டி களில் கையை வைத்தால் வெட்டுவோம்" என்றார். 

இந்நிலையில் சிறீராம் சேனா அமைப்பினர் வரும் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கருநாடகா முழுவதும் சாவர்க்கர், பால கங்காதர திலகர் ஆகியோரின் படங்கள் வைக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

சாவர்க்கர் ரத யாத் திரைக்கு காங்கிரசாரும் முசு லிம் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், குடகு ஆகிய மாவட்டங் களில் பதற்றம் ஏற்பட்டுள் ளது. அங்கு முன் னெச்ச ரிக்கை நடவடிக் கையாக காவல்துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment