திருவாரூர், செப்.3 பிறப்பின் அடிப்படை யில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கின்ற சனாதன தர்மத்தின் ஆணி வேரை அகற்றும் பணியில் அயராது தந்தைபெரியார் காலந்தொட்டு இயக் கம் செயலாற்றி வருகிறது. ஜாதி இழிவுகளைக் கற்பித்து அப்பாவி பாமர மக்களை சுரண்டி வருகிறது ஆரியம். ஆரியத்தின் ஆதிக்கத்தை சரித்து, சமுதாயத்தில் பேதமற்ற பெருவாழ்வு மலர, பிறவி பேதத்தை ஒழித்து, பெண்ணடி மைத்தனத்தை ஒழித்து, சமத்துவம், சமதர் மத்தை எட்டிட சமூக நீதி காத்திட எல்லார்க்கும் எல்லாம் என்ற உலகம் அமைந்திட தந்தை பெரியார் வழியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இயக்கத்தை வழிநடத்தி வருகிறார். தந்தைபெரியார் கொள்கை முரசு கொட்டி, பன்னாட்டளவில் பெரியார் உலக மயமாக்கப் பட்டு வருகிறார்.
22.8.2022 அன்று நடைபெற இருந்த சனாதன எதிர்ப்பு மாநாடு கடும் மழை காரண மாக தற்போது செப்டம்பர் 4 இல் நடைபெறு கிறது. இம்மாநாடு நடைபெறக்கூடாது என்று சனாதனிகள் கூறுகின்றனர்.
ஆட்சி, அதிகார பீடங்களில் சனாதனிகள் அமர்ந்தாலும், அவர்களின் கொட்டத்தை அடக்கும் திராவிட அடலேறுகளின் எழுச்சி யின் சூட்டை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மாநாட்டு நடைபெறக்கூடாது என்று ஆரியக் கூட்டம் கொக்கரித்த அதேநேரத்தில், கழக இளைஞர் பட்டாளம் பேரெழுச்சியுடன் மாநாட்டை சிறப்பாக நடத்த தீவிரமாக களப்பணியில் இறங்கியுள்ளது.
திருவாரூரில் திராவிடர் கழகம் சார்பில் Ôசனாதன எதிர்ப்பு, திராவிட மாடல் விளக்க திறந்தவெளி மாநாடுÕ கடந்த 22.8.2022 அன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட் டிருந்தது. தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களும் வருகை தந்து, கழகத் தோழர்களும், பொது மக்களும் திரண்ட நிலையில், கடும் மழையின் காரணமாக 4.9.2022 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்குரிய ஏற்பாடுகள் மெருகூட்டப்பட்டு நடைபெற்று வருகின்றன.
4.9.2022 மாலை 3 மணிக்கு திருவாரூர்
க.முனியாண்டி, வழக் குரைஞர் சு.சிங்காரவேல், பாவலர் பொன்னரசு குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவாரூர் தெற்கு வீதியில் மாலை 5 மணிக்கு சனாதன எதிர்ப்பு, திராவிட மாடல் விளக்க திறந்தவெளி மாநாடு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடை பெறுகிறது.
திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன் வரவேற்புரையுடன் மாநாடு தொடங்குகிறது.
மாநாட்டில் சட்டமன்ற உறுப்பினர் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே.கலைவாணன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தமிழ்நாடு அரசு தாட்கோ தலைவர் மேனாள் அமைச்சர் உ.மதிவாணன், திருவாரூர் நகர திமுக செயலாளர் வாரை எஸ்.பிரகாஷ், எம்.சி., நாகை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் பூபேஷ் குப்தா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய தேசிய காங்கிரசு கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன், மதிமுக அரசியல் ஆய்வுமய்ய செயலாளர்மு.செந்திலதிபன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
பங்கேற்போர்
இந்திய தேசிய காங்கிரசு கட்சி மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இல.மேகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் வை.செல்வராஜ், விடுதலை சிறுத் தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் மா.வடிவழகன், திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவர்(திமுக) தலையாமங்கலம் ஜி.பாலு, திருவாரூர் நகர மன்றத் தலைவர் (திமுக) புவனப்ரியா செந்தில், ஒன்றிய திமுக செய லாளர்கள் திருவாரூர் புலிவலம் தேவா, கொரடாச்சேரி ஆர்.பாலச்சந்திரன், கொரடாச் சேரி ஆர்.சேகர் (எ) கலியபெருமாள், கோட்டூர் பால.ஞானவேல், மன்னை கிழக்கு அய்வி.கும ரேசன், கூத்தநல்லூர் நகர திமுக செயலாளர் எஸ்.வி.பக்கிரிசாமி, கொரடாச்சேரி பேரூர் செயலாளர் பூண்டி கே.கலைவேந்தன், திரா விடர் கழகப் பொறுப்பாளர்கள் மண்டலத் தலைவர் கி.முருகையன், மண்டல செயலாளர் சு.கிருட்டினமூர்த்தி, மாநில விவசாய தொழி லாளர் அணி செயலாளர் க.வீரையன், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் இரா.சிவக்குமார், மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி, மாணவர் கழக மாநில துணை செயலாளர் ஜெ.உமாநாத், மாவட்ட துணைத் தலைவர் கி.அருண்காந்தி, மாவட்ட அமைப்பாளர் ச.பொன்முடி, மாவட்ட விவசாய அணி தலைவர் பெ.ரெத்தினசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.வி.சுரேஷ், வசந்தா கல்யாணி, மண்டல இளைஞரணி செயலாளர் நா.பொன்முடி, மண்டல மாணவர் கழக செயலாளர் இராச.இளமாறன், திருவாரூர் நகரத் தலைவர் கோ.இராமலிங்கம், நகர செயலாளர் ப.ஆறுமுகம், இளைஞரணி மாவட்டத் தலைவர் கோ.பிளாட்டோ, மகளிரணி மாவட்டத் தலைவர் இரா.மகேஸ்வரி, இளைஞரணி மாவட்டச் செயலாளர் மு.மதன், மகளிரணி மாவட்டச் செயலாளர் சி.சரஸ்வதி, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் அரங்க. ஈவெரா, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் க.அசோக்ராஜ் உள்பட திராவிடர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளர் கழகம், மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு கலை இலக்கிய அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைகள் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். திமுக, காங்கிரசு, சிபிஅய், சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment