திருவாரூரில் மாநாடு பிரமாண்ட பந்தல், மேடை அமைப்புப் பணிகள் தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

திருவாரூரில் மாநாடு பிரமாண்ட பந்தல், மேடை அமைப்புப் பணிகள் தீவிரம்

திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கே.கலைவாணன் ஒருங்கிணைப்பில் தி.மு.க திருவாரூர் நகர செயலாளர் வாரை   எஸ்.பிரகாஷ்  மேற்பார்வையில் மழைபெய்தாலும் தடைபடாமல் மாநாடு நடைபெறும் வகையில் மாபெரும் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் திருவாரூரில் முகாமிட்டு பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். திராவிடர் கழக திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் இரா.சிவக்குமார், மாவட்டத் துணைத்தலைவர்  எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராசு, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீரையன், திருவாரூர் நகர செயலாளர் 

ப. ஆறுமுகம், திருவாரூர் நகரத் தலைவர்  எஸ்.வி.சுரேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் இராமலிங்கம், மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமைக்கழக பேச்சாளர் வழக்குரைஞர் சு.சிங்காரவேல் ஆகியோர் மாநாட்டு ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு  வருகின்றனர்.



No comments:

Post a Comment