தமிழ்நாட்டில் புதிதாக 535 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 535 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, செப்.29 தமிழ்நாட்டில்   ஆண்கள் 312, பெண்கள் 223 என மொத்தம் 535 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னை யில் 104 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 82,051ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 38,507 பேர் குணமடைந்துள்ளனர்.  மட்டும் 509 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 5,498 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் இல்லை.

தமிழ்நாட்டில்  கரோனா தொற்று பாதிப்பு 537 ஆகவும், சென்னையில் 105 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில்..

இந்தியாவில் புதிதாக 3,615 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி யுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 40,979 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.4,972 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 217.96 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment