இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தது

புதுடில்லி, செப்.29-  கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொது கருவுறுதல் விகிதம் 20 விழுக்காடு குறைந்துள்ளது. அதாவது 15 முதல் 49 வயது  வரையிலான 1000 பெண்களில், ஓர் ஆண்டுக்கு குழந்தை பெற்றெடுக்கும் விகிதம் 20 விழுக்காடு அளவுக்கு குறைத்துள்ளது. மாதிரி பதிவு முறை (Sample Registration System - SRS)  இதுதொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், ஜிஎப்ஆர் எனப்படும் பெண்கள் கருவுறுதல் சராசரி விகிதம் (General Fertility Rate - GFR), 2008 முதல் 2010 வரை யிலான மூன்று ஆண்டுகளில் 86.1 சதவிகிதமாக இருந்தது. இது  2018 முதல் 2020 வரையிலான ஆண்டுகளில் 68.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதுவே, நகரப் பகுதிகளில் 20.2 சதவிகிதமும்,  கிராமப் பகுதிகளில் 15.6 விழுக்காடு என்ற அளவில் கருவுறுதல் விகிதம் குறைந் துள்ளது. திருமண வயது அதிகரிப்பு, பெண்களிடையே அதிக கல்வியறிவு விகிதம் மற்றும் நவீன கருத்தடை முறைகள் எளிதாகக் கிடைப்பது ஆகி யவையே கருவுறுதல் விகிதம் குறைந்ததற்கு காரணம் என்று பார்க்கப்படுகிறது. கல்வி யறிவற்ற மற்றும் கல்வியறிவு பெற்ற இந்திய பெண்களுக்கு இடையே கருவுறுதல் விகிதத் தில் வேறுபாடு இருப்பதை மாதிரி பதிவு முறை அறிக்கையும் (SRS) தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவில் இப்போது 139 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் நவீன கருத்  தடை முறைகளைப் பயன்படுத்து கின்றனர். பெண்கள் மற்றும் பெண்  குழந்தைகளின் இனப்பெருக்க  உரிமைகளை ஆதரிக்கும் உல களாவிய கூட்டாண்மையான குடும்பக் கட்டுப்பாடு (FP2020) அமைப்பு, கடந்த எட்டு ஆண்டுகளில் குடும்பக் கட்டுப்பாட்டில் ஏற்பட் டுள்ள முன்னேற்றத்தை தனது அறிக்கையில் விவரித்துள்ளது. 

கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத் துவதில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், கருத்தடை பயன்பாடு இந்தியாவில் 54.5  மில்லியன், அதிகமான திட்டமி டப்படாத கர்ப்பங்கள், 1.8 மில்லியன் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு கள் மற்றும் மகப்பேறு இறப்பு 23 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் தடுக்கப்பட்டுள்ளன. குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களில் அதிகம் செலவிடும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்கிறது. 2012 ஆம் ஆண்டு முதல் 13 குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் நவீன கருத்தடை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித் துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 121 மில்லியனுக்கும் அதிகமான திட்டமிடப்படாத கர்ப்பங்கள், 21 மில்லியன் பாதுகாப்பற்ற கருக் கலைப்புகள் மற்றும் 1 லட்சத்து, 25 ஆயிரம் மகப்பேறு இறப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.


பாஜகவினரால் இளம்பெண் கொலை

ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

டேராடூன்,செப்.29- உத்தராகண்ட் மாநிலத் தில் அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமாக ரிஷிகேஷில் சொகுசு விடுதி உள்ளது. இந்த சொகுசு விடுதியில் அங்கிதா பண்டாரி என்ற பெண் வரவேற்பாளரை புல்கிட் மற்றும் சொகுசு விடுதி மேலாளர், உதவி மேலாளர் ஆகியோர் கொலை செய்து அருகில் உள்ள ஓடையில் வீசியதாக கூறப்படுகிறது. உடற் கூராய்விலும் இது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த கொலை நிகழ்வு அங்கிதாவின் சமூக வலைதள நண்பர் ஒருவரின் மூலமாக வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அங்கிதா பண்டாரி கொலை தொடர்பான அனைத்து ஆதாரங் களும் பத்திரமாக உள்ளதாகவும், அதை அழிக்க எந்த முயற்சியும் நடக்காது எனவும் உறுதியளித்த உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி கொலையான அங்கிதாகுடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவியை அறிவித்தார். மேலும், இந்த கொலை வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் எனவும் நீதி நிலைநாட்டப்படும் என்றும் அவர் உறுதி யளித்துள்ளார்.

No comments:

Post a Comment