பக்தர்களின் ரவுடித்தனம் 8 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

பக்தர்களின் ரவுடித்தனம் 8 பேர் கைது

திருத்தணி, செப்.6 திருத்தணி முருகன் மலைக் கோவி லில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளரை தாக்கிய ஆந்திரா பக்தர்கள் எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவி லுக்கு, தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். காலை 6:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் வரும் பக்தர்கள் மற்றும் வேண்டுதல் உள்ள பக்தர்கள், மலைக்கோவில் ஆர்.சி. மண்டபத்தில் இரவு தங்கியிருந்து காலையில் மூலவரை தரிசிப்பர். இரவு நேரத்தில் மலைக்கோவிலில் காவல்துறையினர் மற்றும் கோவில் ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவர். அந்த வகையில்,  3.9.2022 அன்று இரவு, சிறப்பு காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் உள்பட காவலர்கள் மலைக்கோவிலில், இரவு 11:30 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், ரேணிகுண்டா அடுத்த எருமபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள், 10க்கும் மேற்பட்டோர் காவடிகளுடன் திருத்தணி மலைக்கோவிலுக்கு வந்தனர். சிறப்பு காவல் துறை ஆய்வாளரிடம் வாகனத்தை மாடவீதியில் விட வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு காவல் ஆய் வாளர்., வாகனங்களை 'பார்க்கிங்'கில் விட அறிவுறுத்தி யுள்ளார். மேலும், 'மண்டபத்தில் தங்கியிருந்து காலையில் தரிசனத்திற்கு செல்லலாம்' என கூறியுள்ளார்.வாகனத்தை விட மறுத்ததால், ஆத்திரமடைந்த 10 பேர் கும்பல், காவல் ஆய்வாளர் மீது, கை மற்றும் இரும்பு ராடால் தாக்கினர்.

இதில், காவல் ஆய்வாளருக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.அங்கிருந்தோர் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து, திருத்தணி காவல்துறை வழக்கு பதிந்து, ஆந்திர மாநிலம், எருமபாளையத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரா, 32, புருஷோத்தமன், 25, ராஜேஷ், 30, வெங்கடேசுலு, 40, முரளி, 30, உதயகுமார், 21, வெங்கடேசன், 20 மற்றும் முனிராஜுலு, 44, ஆகிய எட்டு பேரை கைது செய்தனர்.


No comments:

Post a Comment