ஆதரவற்ற மகளிருக்கான நலவாரியம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

ஆதரவற்ற மகளிருக்கான நலவாரியம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை,செப்.6- தமிழ்நாட்டில் உள்ள கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்ற மகளிருக்கான நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. நல வாரியம் அமைத்ததற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகளின் பிரச்சினைகளை களைய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக நலத்துறை அமைச்சரை தலைவராகக் கொண்டு நல வாரியம் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment