பெரம்பலூரில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற மனு(அ)தர்ம விளக்க ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

பெரம்பலூரில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற மனு(அ)தர்ம விளக்க ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், செப். 27- பெரம்ப லூர் மாவட்ட திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் 24.9.2022 சனிக் கிழமை மாலை 5.30 மணி யளவில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சி.தங்க ராசு தலைமையில், மாவட்ட செயலாளர் மு.விசயேந்தி ரன் வரவேற்பில் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சி.பி. எம். மாநிலக்குழு உறுப் பினர் தோழர் சாமி.நடராசன் உரை நிகழ்த்தி னார். திமுக பொதுக்குழு உறுப்பினர், ஓவியர் 

கி.முகுந்தன், நகரத்தலைவர் ஆறுமுகம், பெரம்பலூர் மாவட்ட சி.பி.எம்.செய லாளர் இரமேஷ், சிபிஅய் மாவட்ட செயலாளர் ஜெயராமன், விவசாய சங்கத் தலைவரும், பெரி யார் பெருந்தொண்டரு மான வரதராசன், விசிக வீரசெங்கோலன், சர்பு தீன், மதிமுக துரைராஜ், காவிரிநாடன், சின்னப் பத் தமிழர், துரைசாமி, சின்னசாமி, வேலாயுதம் மணிமாறன் மற்றும் அனைத்து கட்சி உறுப் பினர்களும், பொதுமக்க ளும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அண்ணாதுரையின் நன்றி உரையோடு கூட் டம் சிறப்பாக நிறைவுற்றது. 

No comments:

Post a Comment