கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு

நாம்பென், செப். 8-  கம்போடியா நாட்டில் வருகின்ற 2022 செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் நாள் வரை, அங்கோர் தமிழ்ச் சங்கத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், பன்னாட்டு தமிழ் நடுவம், அங்கோர் தமிழ்ச் சங்கம், கம்போடியா தமிழ்நாடு தொண்டு நிறுவனம் மற்றும் கலாச்சாரம் நுண்கலை அமைச்சகம் இணைந்து நடத்தும் உலகத் திருக்குறள் மாநாடு -2022 நடக்கிறது.

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் கெமெர் மொழி திருக்குறள் வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது. மாநாட்டின் முதல் நாள் செப்டம்பர் 29ஆம் தேதியன்று நடைபெறும் உலக திருக் குறள் மாநாட்டின் தொடக்க விழாவில், கம்போடிய அரசின் கலாச்சார மய்ய வளாகத்தில் வி.ஜி.பி. 

உலகத் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் சிலை நிறுவப் படுகிறது. அதனைத் தொடர்ந்து கம்போடிய கெமர் மொழி யில் திருக்குறள் வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது. உலகில் பல்வேறு மொழிகளிலும் திருக்குறள் மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து கம்போடியா மொழியான கெமர் மொழியிலும் திருக்குறள் வெளியிடப்படுகிறது.


No comments:

Post a Comment